துன்பம் வேறு சொல் என்ன..? | Thunbam Veru Sol in Tamil..!
இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் மொத்தமாக 7 பிறவி இருக்கிறது என்று கூறுவார்கள். அதில் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு மாதிரியாக பிறப்பார்கள் என்றும் கூறுவார்கள். அப்படி பார்த்தால் இவ்வாறு கூறுவது என்பது உண்மையா..! அல்லது பொய்யா..! என்ற சந்தேகம் இருந்தாலும் கூட மனித பிறவி மட்டும் மிகவும் கஷ்டமான பிறவி என்று கூறுவார்கள். அதோடு மட்டும் இல்லாமல் இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்றெல்லாம் தத்துவமும் கூட பேசுவார்கள். ஏனென்றால் ஒரு மனிதனின் வாழ்வில் இன்பமானது எந்த அளவிற்கு இருக்கிறதோ அதில் பாதி அளவிலாவது துன்பமும் இருக்கிறது. அதிலும் இந்த கால தலைமுறையினரே இந்த வார்த்தையினை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் சொற்களான துன்பம் என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துன்பம் கஷ்டம் வேறு சொல்:
துன்பம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது:
- வேதனை
- கஷ்டம்
- துயரம்
- இன்னல்
- பீடை
- இடர்
- வருத்தம்
- அல்லல்
- சோகம்
- கவலை
துன்பம் என்றால் என்ன..?
நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு கடும் இழப்பு ஏற்பட்டு அதனால் நமக்கு ஏற்படும் போதும் உண்டாகும் நிலைமையே துன்பம் எனப்படும். அந்த வகையில் சில நேரத்தில் நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பார்க்காத என இந்த இரண்டு செயல்களினாலும் துன்பம் ஏற்படும். இதுவே துன்பம் ஆகும்.
எடுத்துக்காட்டாக:
நாம் ஏதோ ஒரு இடத்தில் பணத்தை கடனாக கொடுத்து இருக்கின்றோம் எனும் போது திடீரென்று அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்றால் அப்போது நமக்கு துன்பம் ஏற்படும்.
துன்பம் எதிர்ச்சொல்:
துன்பம் என்ற சொல்லின் எதிர்சொல் இன்பம் ஆகும்.
துன்பம் Meaning in English:
அதேபோல் துன்பம் என்ற வார்த்தைக்கு நிகரான பொருள் கொண்ட ஆங்கில சொல் Suffering எனப்படும்.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |