What is 22 Carat and 24 Carat Gold in Tamil
நாம் அனைவருமே தங்க நகையை 22 கேரட், 24 கேரட், 18 கேரட் போன்றெல்லாம் கூறி கேட்டிருப்போம். ஏன் நாமும் அதைத்தான் கூறி இருப்போம். ஆனால் 22 கேரட் தங்கம் என்றால் என்ன.? 24 கேரட் தங்கம் என்றால் என்ன.? என்று பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். எனவே அதனை அறிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் என்றால் என்ன.? இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு.? உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Difference Between 22k and 24k Gold in Tamil:
கேரட் என்றால் என்ன.?
கேரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளவிட பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். அதாவது கேரட் மதிப்பு அதிகமாக இருந்தால் தங்கம் தூய்மையானது என்று அர்த்தம். இது 0 முதல் 24 வரை அளவிடப்படுகிறது. எனவே 24 கேரட் தங்கம் தூய்மை வாய்ந்த தங்கமாக கருதப்படுகிறது. இதற்கு மேல் தூய்மையான தங்கம் இல்லை.
22 கேரட் தங்கம் என்றால் என்ன.?
22 கேரட் தங்கம் என்பது, 22 கேரட் தங்கமும், மற்ற உலோகங்ககளான செம்பு, துத்தநாகம் போன்றவை 2 பாகங்கள் கலந்திருக்கும். மேலும், இந்த கேரட்டின் தங்கம் 91.67% தூய தங்கத்தைக் கொண்டிருப்பதால் ‘916 தங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
(Nov 2023) தங்கம் வாங்க நல்ல நாள் 2023
24 கேரட் தங்கம் என்றால் என்ன.?
24 கேரட் தங்கம் என்பது சுத்தமான தங்கம் ஆகும். ஏனெற்றால் இதில் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தங்கதினால் மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகும். அதாவது 24K தங்கம் என்பது 99.9 சதவிகிதம் தூய்மையைக் குறிக்கிறது. ஆகவே 24 கேரட் தங்கத்தை விட தூய தங்கம் வேறுவொன்றுமில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
24K மற்றும் 22K தங்கம் இடையே வேறுபாடு:
24K தங்கம். | 22K தங்கம். |
99.9% தங்கம் உள்ளது. | 91.67% தங்கம் உள்ளது. |
தங்கம் மென்மையானது. முதலீடு செய்வதற்கு ஏற்றது. | தங்கம் கடினமானது மற்றும் நீடிக்கக்கூடியது. |
அதிக விலை. | குறைந்த விலை. |
கேரட் அடிப்படையில் தங்கத்தின் தூய்மை விகிதம்:
- 24 காரட் = 100% சுத்தத் தங்கம்
- 22 காரட் = 91.7 % தங்கம்
- 18 காரட் = 75.0 % தங்கம்
- 14 காரட் = 58.3 % தங்கம்
- 12 காரட் = 50.0 % தங்கம்
- 10 காரட் = 41.7 % தங்கம்
தங்கம் விலை இன்றைய நிலவரம் 2023 (07.11.2023)
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |