ஒரு நாளைக்கு தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும்
உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமாக இருப்பது தண்ணீர் தான். மனித உடலானது 70% நீரால் ஆனது. நம் உடலுக்கு இப்படி வாய்ந்த நீரை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
மனிதன் ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் வரைக்கும் குடிக்க வேண்டும். அதுவே டம்ளரில் என்றால் 8 கிளாஸ் குடிப்பது அவசியமானது. இவை வயதிற்கு ஏற்றது போல் மாறுபடும். அவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வயதுபடி ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்:
6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
20 முதல் 35 வயது அவரை உள்ள ஆண்கள் 4.2 லிட்டரும், 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 3.3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வயதானவர்கள் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக பிரச்சனை காரணமாக டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் தண்ணீர் அதிகம் அருந்தக்கூடாது. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதால், தண்ணீர் வெளியேறாமல், நுரையீரல், கால் என உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மருத்துவர் கூறிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர் அதிகமாகப் பிரியும். சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 800 – 900 மி.லி அளவே இருக்கும். அதனால், இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது. சர்க்கரை நோய் இருந்தது உங்களுக்கு 50 வயது ஆக இருந்தால் இரவு அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இரவு தூங்க முடியாமல் சிறுநீர் அதிகமாக கழிக்க வேண்டியிருக்கும்.
சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் ஒரு நாளைக்கு கட்டாயம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை ஏன் தண்ணீர் குடுக்க கூடாது தெரியுமா..?
எப்போது தண்ணீர் குடிக்க கூடாது:
சாப்பிடுவதற்கும் முன்பும், பின்பும் தண்ணீரை அதிகமாக குடிக்க கூடாது. ஏனென்றால் வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலத்தை தண்ணீர் நீர்த்து போக செய்து சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு நேரமாகும்.
இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Learn |