PWD என்பதன் தமிழ் விரிவாக்கம் | PWD Meaning in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் PWD என்பதன் தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற short form எழுத்துக்களுக்கு சரியான விரிவாக்கத்தை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. அப்பொழுது தான் அதற்கான விரிவாக்கத்தை யாராவது நம்மிடம் கேட்டார்கள் என்றால் அதற்கு நாம் சரியாக பதிலளிக்க முடியும். மேலும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இது போன்ற short form words அவர்களது தேர்வுகளில் கேட்டகட்டிருக்கும். ஆகவே நீங்கள் இதனை தெரிந்துகொள்வதனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் PWD என்பதன் தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
PWD Full Form in Tamil..!
PWD என்பது Public Works Department என்ற ஆங்கில எழுத்துக்களை குறிக்கும் சொற்சுருக்கம் ஆகும். இதனை தமிழில் பொதுப்பணி துறை என்று அழைப்பார்கள். இந்த பொதுப்பணித் துறை என்றால் என்ன? அதன் பணிகள் போறான் விவரங்களி இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின் கீழ் இயங்கும்துறைகளில் ஒன்றாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது.
பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் பழமையான துறை. 1800-ஆம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. அது 1858-யில் அரசுடைமை ஆக்கப்பட்டது.
அரசு செயலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப்பணித் துறை இயங்குகிறது. கட்டிடக்கட்டுமான அமைப்புக்களுக்கும் நில நீர்வள அமைப்புகளுக்குமான அனைத்து கொள்கைகளையும் நிர்வகிக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |