விகடகவி வேறு சொல் | Another Name of Vikadakavi in Tamil

Advertisement

Vikadakavi Meaning in Tamil | Vikadakavi Veru Sol 

வாருங்கள் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது நமக்கு மிகவும் பரீட்சியமான வார்த்தையான விகடகவி என்பதன் வேறு சொல் பற்றி தான். விகடகவி என்ற வார்த்தையை ஆங்கிலியத்தில் Palindrome என்று சொல்வார்கள், இந்த வார்த்தை எங்கிருந்து படித்தாலும் ஒரே மாதிரி இருக்கும், மற்றும் ஒரே அர்த்தத்தை தரும். தமிழ் இலக்கியத்தில் நிறைய வகையான பிரிவுகள் அடங்கும், அதில்  இந்த விகடகவியும் ஒன்று.

சற்று கீழே உள்ள அனைத்து தகவல்களை படித்து விகடகவிக்கு என்னன்னா வேறு சொற்கள் இருக்கின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

விகடகவி என்றால் என்ன?

விகடகவியை விகடம் + கவி என்று பிரித்து இரண்டு அர்த்தங்களாக கூறலாம். விகடம் என்றால் நகைச்சுவை, நையாண்டி, இரட்டைப் பொருள் கொண்ட சொற்களை உரைநடை அல்லது கவிதை வடிவங்களில் கூறுவது போன்றதாகும். கவி என்றால் கவிஞர் என்று பொருளாகும். 

அந்தக்காலத்தில், அரசர்கள் பலர் தங்களது அரசவைகளை மகிழ்விப்பதற்காக இதுபோன்ற விகடகவிகளை நியமிப்பார்கள். 

சதாவதானம் என்றால் என்ன.? உங்களுக்கு தெரியுமா.?

Vigadakavi Veru Sol in Tamil | Vikadakavi in Tamil 

விகடகவி சொற்களை வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ வாசித்தல் ஒரே மாதிரி தான் இருக்கும், இதுபோன்ற சொற்கள் அர்த்தமும் மாறாது அதே நேரம் எழுத்துக்களும் மாறாது. இந்தனை இருவழி சொற்கள் என்றும் சொல்வார்கள். சில இருவழி சொற்கள் கீழே கூறப்படுகின்றது.

  • துவளுவது
  • தாளாதா
  • வா தாத்தா வா
  • மாலா போலாமா
  • தேருவருதே
  • மேகமே
  • மாயமா
  • கற்க
  • மாமா
  • காக்கா
  • சிவா வாசி
  • கைரேகை முதலியன.

விகடகவி ஒத்த சொற்கள்

விகடக்காரன், விகடன்

விகடகவி வேறு சொற்கள் 

  • இருவழியொக்கும்
  • இருவழிச் சொல்
  • மாலைமாற்று

விகடகவி எடுத்துக்காட்டு:

  • இனி கைரேகை வைத்தால் தான் நாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கமுடியுமா.
  • தெனாலி இராமன் ஒரு விகடகவி ஆவார்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement