Front Hairstyle for Broad Forehead
நெற்றியானது மிகவும் பெரியதாக இருந்தால், அது ஒருவரின் அழகையே வித்தியாசப்படுத்திக் காட்டும். மேலும் நிறைய மக்களுக்கு நெற்றியானது மிகவும் பெரியதாக இருக்கும். இதனால் அவர்கள் கவலை அடைவார்கள். அதோடு மட்டுமில்லாமல் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை வாங்கி முன் நெற்றியில் பயன்படுத்துவார்கள்.
இதனால் சில பேருக்கு ரிசல்ட் கொடுத்திருக்கும், சில பேருக்கு ரிசல்ட் கொடுத்திருக்காது. அதனால் நீங்கள் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால் இந்த பதிவில் உங்களின் முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைலை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க என்னென்ன ஹேர் ஸ்டைலுன்னு தெரிஞ்சுப்போம்.
முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைல்:1
முதலில் நீங்கள் கோண வாகு எடுத்துகொள்ளவும், அதில் நீங்கள் ஒரு பக்கத்திலிருந்து முடியை அதிகமாக எடுத்து நெற்றியை மறைப்பது போல் சீவி கொள்ள வேண்டும். கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு சீவி கொள்ள வேண்டும்.
முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைல்:2
கோண வாகு எடுத்து ஒரு பக்கத்தின் முடியை நெற்றிக்கு வரும் வரைக்கும் நறுக்கி கொள்ளவும். இதனை நீங்கள் தலையில் எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் பிண்ணினாலும் நறுக்கி விட்ட முடியானது நெற்றியை மறைத்து விடும். கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.
முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைல்:3
நேர் வகுடு எடுத்து இரு புறமும் உள்ள முடியை நெற்றியை மறைக்கும் வகையில் எடுத்து சீவி கொள்ள வேண்டும். சுருக்கமாக கூறினால் வலித்து வைத்து சீவ வேண்டும்.
முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைல்:4
கீழே மூன்று விதமான ஹேர் ஸ்டைல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு ஏற்றவாறு உள்ள ஹேர் ஸ்டைலை ட்ரை பண்ணுங்க.
முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
முன் நெற்றியை மறைக்கும் ஹேர் ஸ்டைல்:5
கீழ் உள்ள ஹேர் ஸ்டைல் மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, முன் நெற்றி தெரியாது.
மேல் கூறப்பட்டுள்ள ஹேர் ஸ்டைல் அனைத்தும் கோரை முடி உள்ளவர்களுக்கு செட் ஆகும், மேலும் முடி நறுக்கிவிட்டு பின்னும் ஹேர் ஸ்டைல் மட்டும் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு செட் ஆகாது, ஏனென்றால் நீங்கள் முடியை நறுக்குவதோடு hair straightening செய்ய வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |