வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வித்தியாசமான முறையில் பழங்களின் தோலை பயன்படுத்தி செய்த ஹேர் டை.. 100% ரிசல்ட் தரக்கூடியது..!

Updated On: November 11, 2023 10:46 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

இயற்கை ஹேர் டை தயார் செய்யும் முறை – Hair dye for black hair

நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது பழங்களின் தோலை பயன்படுத்தி மிக எளிமையான முறையில் ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இது நல்ல ரிசல்டினை உங்களுக்கு கொடுக்கும் என்று நம்புகிற்றேன். சரி வாங்க இந்த ஹேர் டை தயார் செய்ய என்னென்ன பழங்களின் தோலை பயன்படுத்த வேண்டும், பழங்களின் தோலினை தவிர வேறு என்னென்ன பொருட்களை எல்லாமே இந்த ஹேர் டை தயார் செய்ய பயன்படுத்த வேண்டும், ஹேர் டை தயார் செய்த பிறகு நாம் எப்படி அதனை தலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • ஹென்னா பவுடர் – ஒரு ஸ்பூன்
  • வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • செம்பருத்தி பூ பவுடர் – ஒரு ஸ்பூன்
  • வாழைப்பழ தோல் – 4
  • ஒரு மாதுளை பழத்தின் தோல்
  • தண்ணீர் – 1 1/2 கிளாஸ்
  • ஓமவல்லி இலை – 10

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்.

செய்முறை:

அடுப்பில் ஒரு இருப்பு கடாய் வைத்து அதில் வாழைப்பழம் தோல் நான்கு, ஒரு மாதுளை பழத்தின் தோல் மற்றும் பத்து ஓமவல்லி இலையை சேர்த்து 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதாவது வாழைப்பழ தோல், மாதுளை பழத்தின் தோல் மற்றும் ஓமவல்லி இலையில் உள்ள எசன்ஸ் முழுவது தண்ணீரில் இறங்கும் வரை அதாவது கருப்பாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து சாறினை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு மற்றொரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஹென்னா என்று சொல்லப்படும் மருதாணி பவுடரை ஒரு ஸ்பூன், செம்பருத்தி பவுடர் ஒரு ஸ்பூன், வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் இரண்டு ஸ்பூன் மற்றும் நாம் வடிகட்டி வைத்துள்ள தண்ணீரினை இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒரு பேஸ்ட் போல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் இதனை தலையில் நன்றாக அப்ளை செய்யுங்கள், அப்ளை செய்த பிறகு ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும், ஒரு மணி நேரம் கழித்து தலையை எப்பொழுதும் போல தலை அலசவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை மட்டும் செய்து வந்தாலே போதும். நரைமுடி முழுமையாக கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 நிமிடத்தில் முகம் பிரைட்டாக இந்த பேஸ் பேக் மட்டும் போதும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Verkuru Neenga

வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Diet Food for Weight Loss in Tamil

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..

beauty tips for face at home for glowing skin in tamil

ஒரே வாரத்தில் சருமம் பளபளப்பாக மாற வீட்டு அழகுகுறிப்புகள்…

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்..!

How Many Time to Wash Hair in a Week

ஒரு வாரத்தில் எத்தனை முறை தலை குளிக்கலாம்!

benefits of eating beetroot daily to improve health in tamil

சரும பொழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை…பல அற்புதம் செய்யும் பீட்ருட்!

mangu maraya tips in tamil

முகத்தில் உள்ள மங்கு மறைந்து போவதற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

How to Get Chubby Cheeks Naturally Fast in Tamil 

கன்னத்தில் சதை போட என்ன செய்ய வேண்டும்.?