10 நாட்களுக்கு இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு தலைமுடி வேகமாக வளரும்..!

Advertisement

Hair Fall Control and Hair Growth Home Remedies in Tamil

பொதுவாக அனைவருக்குமே தங்களது அழகினை பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் அது நடக்காத காரியமாகிவிட்டது. இதற்கான காரணம் என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக வேலைக்கு செல்கிறார்கள். அதனால் தங்களின் அழகினை பராமரிப்பதற்கென்று தனியாக  ஒதுக்கவே முடியாத சூழல் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் மிகவும் எளிமையான அழகு குறிப்புகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் தலைமுடி நன்கு வளர்ச்சி அடைய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil:

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையால் நாம் அனைவருக்குமே தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. அதனை குறைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 
  2. சின்ன வெங்காயம் – 10
  3. நெல்லிக்காய் – 5 
  4. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  7. கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி அளவு 
  8. செம்பருத்தி இலை –  1 கைப்பிடி அளவு 
  9. செம்பருத்தி பூ – 10
  10. மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு 
  11. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  12. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 

முகத்தில் உள்ள பள்ளங்களை 7 நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 10 சின்ன வெங்காயம், 5 நெல்லிக்காய், 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 10 செம்பருத்தி பூ, 1 கைப்பிடி அளவு மருதாணி இலை மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த 1 கைப்பிடி அளவு இலையையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க

கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை கலந்து நன்கு கொதிக்க விடுங்கள்.

வேப்பிலையை சேர்க்கவும்:

இறுதியாக அதனுடன் 1 கைப்பிடி அளவு வேப்பிலையையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்களின் தலையில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என தொடர்ந்து செய்தாலே உங்களின் தலைமுடி நன்கு வளர்ச்சி அடையும்.

உங்களின் முடி நன்கு வளர்ச்சி அடைவதை நீங்களே கண்டு ஆச்சிரியப்படுவீர்கள்.

5 நிமிடத்தில் எந்த ஒரு வலியும் இல்லாமல் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement