கொட்டிய இடத்தில் எல்லாம் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரவைக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

Home Remedies for Hair Growth in Tamil

இன்றைய சூழலில் உள்ள மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் நமது ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் பல வகையான பிரச்சனைகளில் இந்த முடி உதிர்வும் ஒன்று. இதனை தடுத்து புதிய தலை முடியை வளர வைக்க நீங்களும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எடுத்த அத்தனை முயற்சியினாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்ததா என்றால் நமது அனைவரின் பதிலும் இல்லை என்றே தான் இருக்கும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Increase Hair Growth in Tamil:

How to Increase Hair Growth in Tamil

உங்கள் தலை முடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம். முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

  1. செம்பருத்தி பூ – 4 
  2. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  3. சின்ன வெங்காயம் – 5 
  4. முட்டை – 1
  5. வெந்தயம் – 1 டீஸ்பூன் 
  6. கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன் 

உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க உதவும் 5 எளிமையான வழிகள்

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் நன்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்: 

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 செம்பருத்தி பூ மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 5 சின்ன வெங்காயம் மற்றும் 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

வெந்தயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் ஊற வைத்துள்ள 1 டீஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வது நின்று நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க

முட்டையை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 முட்டையில் இருந்து அதன் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து உங்கள் தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நன்கு தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி நன்கு வளர ஆரம்பிப்பதை காணலாம்.

உங்கள் தலையில் உள்ள பொடுகினை போக்க இந்த ஒரு பொருளை பயன்படுத்தி மசாஜ் செய்து வாருங்கள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement