How to Get Chubby Cheeks Naturally Fast in Tamil | கன்னம் குண்டாக என்ன செய்ய வேண்டும்
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் முக அழகு என்பது மிகவும் முக்கியம். ஆனால், முக அழகை கெடுப்பதற்கென்றே முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவை வந்து விடுகிறது. இவற்றிற்கு மேலாக பெரும்பாலனவர்களுக்கு கன்னம் ஒட்டி இருக்கும். இதனால் முகத்தின் அழகே கெட்டுவிடுகிறது. ஆகையால், ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கு இப்பதிவில் கன்னத்தில் சதை போட என்ன செய்ய வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம்.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பதிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். முக அழகு என்பது எவ்வளவு முக்கியம் என்று. ஒல்லியாக இருந்தாலும் சரி குண்டாக இருந்தாலும் சரி முகம் குண்டாக இருந்தால் தான் அழகாக இருக்கும். கன்னதில் சதை குறைவாக இருப்பவர்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
கன்னத்தில் சதை போட என்ன செய்ய வேண்டும்.?
சப்போட்டா பழம்:
ஒரு மிக்ஸி ஜாரில் 2 சப்போட்டா பழங்களை தோல் நீக்கிவிட்டு சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் காய்ச்சிய பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். இதனை தினமும் குடித்து வருவதன் மூலம் 10 நாட்களிலேயே கன்னத்தில் சதை போடும்.
ஆப்பிள் மற்றும் கேரட்:
ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் காலையில் குடித்து வர வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் கன்னத்தில் சதை போடும்.
முகம் பொலிவு பெற இயற்கையான ஆறு வழிகள்
தேன்:
தினமும் தேன் சாப்பிட்டு வருவதன் மூலம் முகத்தில் சதை போடுவதோடு முகம் பளபளப்பாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல், பப்பாளி மற்றும் தேனை சம அளவு எடுத்து பேஸ்டாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போட்டு வரகன்னம் குண்டாகும்.
உப்பு நீர்:
தினமும் காலையில, வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வாய் கொப்பளித்து வந்தால் கன்னம் குண்டாகும்.
👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |