Long Hair Growth Natural Tips in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி கொட்டுவது, முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். சரி பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. எனவே இந்த 2 பொருட்களையும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவி பாருங்க..! முடி கட்டுக்கடங்காமல் காடுபோல வளரும்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முடி நீளமாக வளர எண்ணெய்:
- தேங்காய் எண்ணெய் – 200 ml
- சின்ன வெங்காயம் – 6
- பூண்டு பற்கள் – 10
இன்று நாம் முடியின் வளர்ச்சிக்காக எடுத்து கொள்ளும் பொருள் இரண்டுமே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சின்ன வெங்காயம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்கிறது. மேலும் இது பொடுகு தொல்லையை அடியோடு விரட்டுகிறது. அதுபோல பூண்டும் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடியை வலிமையாக வளரச் செய்கிறது.
எனவே இவை இரண்டையும் நாம் சம அளவில் எடுத்து கொள்வோம். மேலும் இது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க |
கடாயை எடுத்து கொள்ளவும்:
கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின் அதில் 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். என்ன சூடானதும் நாம் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
இவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின் எண்ணெயை ஆறவிட்டு ஒரு வடிக்கட்டியை வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை எப்போதும் தடவுவது போல முடிக்கு தடவ வேண்டும். இதுபோல செய்து வந்தால் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல வளரும்.
👉தலையில் இருக்கும் பொடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |