கடுமையான பனி மற்றும் வெயிலில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க இது ஒன்று போதுங்க…

Advertisement

இயற்கை முக அழகுக்கு 

நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும். நமது முகம் பொலிவாக இருந்தால் தான் நமக்குள்ளும் ஒரு நேர்மறையான எண்ணம் தோன்றும். அதனால் நமது முகத்தை எப்போதும் பொலிவுடனும் அழகாக வைத்துக்கொள்ள நாம் போராடுவோம். அந்த வகையில் இன்று இயற்கைக்கு முறையில் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள சில இயற்கை டிப்ஸ்களை பார்க்கலாம். இவற்றை நம் வீட்டிலே மிகவும் எளிமையாக செய்யலாம். வாருங்கள் குறிப்பினை பார்க்கலாம்.

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க:

தேவையான பொருட்கள்:

  • தேன்
  • மஞ்சள் தூள்
  • கடலை மாவு
  • கற்றாழை ஜெல்

செய்முறை:

இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க

மஞ்சள் மற்றும் தேன் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களுக்கு எதிராக செயல்படும்.  மஞ்சளில் இருக்கும் ஆண்டிபாடி முகத்தில் படியும் மாசுகளை அழிக்கவல்லது.

முதலில் ஒரு பவுலில் கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின்னர் அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் அப்ளை செய்வதற்கு ஏற்றவாறு தயாரித்துக்கொள்ளவும்.

முகம் பளிச்சென்று மாற்ற தேன் மற்றும் கடலை மாவு:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள பேஸ்டை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் முகத்தினை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நன்றாக துடைத்துக்கொள்ளவும். பின்னர் முகம் கழுத்து என முகத்தின் வறண்ட இடங்களில் தடவி கொள்ளவும்.

பேஸ்டை முகத்தில் தடவிய பிறகு 15 அல்லது 20 நிமிடம் வரை உலர்த்தி பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் போதும் உங்களின் சருமம் எப்போதும் ஃப்ரெஷாக  இருக்கும்.

உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement