1 கிலோ பச்சை அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம்..?

Advertisement

அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்

பண்டிகை காலம் என்றால் வீட்டில் வித விதமான பலகாரம் செய்ய வேண்டும் நிலைமை இருக்கும். அந்த வகையில் சாதாரணமான நாட்களில் நம்முடைய வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் பலகாரம் செய்து இருப்போம். ஆனால் பண்டிகை காலத்தில் அப்படி கிடையாது. ஏனென்றால் நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் பலகாரம் கொடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே இதற்கு ஏற்றவாறு தான் பலகாரம் செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் நாம் எவ்வளவு செய்ய வேண்டும் என்ற அளவினை சரியாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே ஒரு உதாரணமாக 1 கிலோ அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும் என்றும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாங்க.

1 kg Rice With Adhirasam Recipe in Tamil:

பொருள்களின் பெயர் பொருட்களின் அளவு
பச்சை அரிசி 1 கிலோ
வெல்லம் 600 கிராம்
ஏலக்காய் 5
எண்ணெய் 1/2 லிட்டர்
உப்பு சிறிதளவு

அதிரசம் மாவு செய்முறை:

  • முதலில் அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி காய வைக்க வேண்டும். பின்பு அரிசியை மிக்சி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
  • அதன் பிறகு 600 கிராம் வெல்லத்தில் வெல்ல பாகு வழக்கம் போல் செய்து கொள்ள வேண்டும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு, வெல்லப்பாகு, 5 ஏலக்காய் மற்றும் சிறிதளவு உப்பு என இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்து 5 நாட்கள் வரை அப்படியே மூடி வைத்து விட வேண்டும்.
  • ஏனென்றால் 5 நாட்கள் வரை மாவினை அப்படியே வைப்பதன் மூலம் அதிரசம் நன்றாக இருக்கும்.

பச்சரிசி மாவில் அதிரசம் செய்வது எப்படி..?

இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 1/2 லிட்டர் எண்ணெயை சேர்த்து நன்றாக காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு அதிரச மாவில் இருந்து சிறிதளவு எடுத்து அதனை வட்டமாக செய்து எண்ணெய்யில் போட்டு வேக வைத்து எடுத்து விடலாம்.

இதேபோல் மற்ற மாவினையும் செய்து கொள்ளுங்கள். ஆகவே 1 கிலோ அரிசியில் நீங்கள் தாராளமாக 40 அதிரசம் வரை செய்யலாம். அதிரசம் நீங்கள் செய்யும் அளவை பொறுத்தே எண்ணிக்கை ஆனது அமையும்.

7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement

 

Advertisement