1 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடியில் 25 குவிண்டால் பெற ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா..?

cost of cultivation of paddy 1 acre in tamilnadu

Cost of Cultivation of Paddy 1 Acre in Tamilnadu

நாம் அனைவரும் நாள்தோறும் மூன்று வேலையும் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு விவசாயம் செய்தே ஆகா வேண்டும். விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்று கூறுவார்கள். ஏனென்றால் மற்ற வேலையை போல விவசாயம் என்பது கிடையாது. விவசாயம் நாம் செய்யும் போது நல்ல முறையில் இருந்தால் மட்டும் போதாது. நாற்று நடுதல், கலைப்பறித்தல் மற்றும் தண்ணீர் விடுதல் என இதுபோன்ற வேலை எல்லாம் முடிந்த பிறகு கடைசிடியாக தான் அறுவடை என்பதே செய்யப்படுகிறது. மேலும் ரகங்களை பொறுத்தவரை வகைகள் என்பது அதிக அளவு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு நெல்லுக்கும் அறுவடை காலம் என்பது மாறுபடும். ஆனால் ஒரு சிலருக்கு வீட்டில் நிலம் இருந்தும் கூட என்னென்ன வேலை எப்போது செய்ய வேண்டும் என்றும், அதற்கான செலவு என்ன என்றும் தெரியாமலே இருக்கிறது. ஆகவே இன்று 1 ஏக்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன செலவு ஆகும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

1 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய ஆகும் செலவு:

உழவு முறை:

முதலில் உங்களுடைய 1 ஏக்கர் நிலத்தினை உழவு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தண்ணீர் விட்டு வரப்பு போட்ட பிறகு மீண்டும் ஒரு முறை உழவு செய்ய வேண்டும்.

ஆகவே நீங்கள் 2 விதமாக உழவு செய்ய வேண்டும். அப்படி என்றால் மொத்தமாக 1500 ரூபாய் தேவைப்படும்.

நடவுக்கு தேவையான நாத்து:

1 ஏக்கர் நிலத்தில் நீங்கள் நடவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மொத்தமாக 9 கட்டு நாத்து தேவைப்படும். 1 கட்டு நாத்தில் மொத்தமாக 10 புடி இருக்கும். எனவே 1 கட்டு நாற்றின் விலை 500 ரூபாய் என்பதால் 9 கட்டு நாத்து வாங்க 4,500 ரூபாய் தேவைப்படும்.

மேலும் இந்த நாற்று ஆனது கைகளால் நடவு செய்வதற்கு தேவைப்படும்.

நாற்று நடும் முறை:

நடவுக்கு தேவையான நாத்து

இப்போது உழவு செய்து வைத்துள்ள நிலத்தில் 50 செ.மீ இடைவெளி மற்றும் 50 செ.மீ வரிசையில் நாத்தினை நடவு செய்ய வேண்டும். நீங்கள் நடவு செய்த நாட்களில் இருந்து சரியான 20 முதல் 25 நாட்களில் நாற்று சிறியதாக வர ஆரம்பிக்கும்.

ஒரே ஒரு நாளில் உங்களின் 1 ஏக்கர் நிலத்திலும் 7 ஆட்கள் மொத்தமாக நடவு செய்ய முடிப்பதற்கு மொத்தமாக 2,000 ரூபாய் தேவைப்படுகிறது.

களைபறித்தல்:

ஒவ்வொரு நிலத்திற்கும் நீங்கள் இரண்டு முறை களைபறிக்க வேண்டும். அதாவது நடவு செய்த 1 மாதம் கழித்து நடவு செய்ய வேண்டும். பின்பு முதல் களைபறித்த நாட்கள் முதல் சரியாக 45 நாட்கள் கழித்து இரண்டாவது களைபறிக்க வேண்டும்.

ஆகவே இரண்டு முறை கலைபறித்தலுக்கும் சேர்த்து 2,500 ரூபாய் தேவைப்படுகிறது.

தண்ணீர் பாய்ச்சும் முறை:

தண்ணீர் பாய்ச்சும் முறை

நிலத்தில் நடவு செய்யும் போது தண்ணீர் போதுமான அளவு இருந்தால் போதும். ஆனால் மருந்து அடித்தல் மற்றும் களைபறித்தலின் போது வயல் காய்ந்து போகாத அளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும் உங்களிடம் சொந்தமாக போர் இருந்தால் தண்ணீரை அதில் இருந்து பாய்ச்சுக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தண்ணீர் பாய்ச்ச 2,000 ரூபாய் செலவு ஆகும்.

வயலுக்கு உரம்:

வயலுக்கு உரம்

உரம்:

முதலில் நடவு நட்ட பிறகு 5-வது நாளில் அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு அடி உரமாக 20 கிலோ DAP-யும் பொட்டாஷ் மொத்தமாக 12 கிலோவும் தேவைப்படுகிறது.

அதன் பிறகு மேல் உரமாக 30-வது நாளில் 42 கிலோ DAP-யும் பொட்டாஷ் மொத்தமாக 15 கிலோவும் கலந்து அடிக்க வேண்டும். மேலும் இதனுடன் தண்ணீர் மருந்தினையும் அடிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக மீண்டும் 30 வது நாளில் மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் உரம் அடிக்க வேண்டும்.

களைக்கொல்லி:

வயலில் பூச்சி, களை அதிகமாக இருத்தல் என இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் களைக்கொல்லி அடிக்க வேண்டும்.

ஆகவே மொத்தமாக உரம் வாங்குவதற்கு 13,000 ரூபாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை காலம்:

நீங்கள் சி ஆர் 1009 அல்லது பி பீ டீ 5204 என்ற நெல்ளினை பயிர் செய்கிறீர்கள் என்றால் இதனுடைய அறுவடை காலம் என்பது 130 முதல் 137 நாட்கள் வரையிலும் ஆகும்.

மேலும் 1/2 மணி நேரத்திற்கு மிசின் அறுவடை செலவு 600 ரூபாய் ஆகும். அப்படி என்றால் 1 ஏக்கர் நிலத்தினை அறுவடை செய்ய மொத்தமாக 1 1/2 மணி நேரம் ஆகும். எனவே மிசின் செலவு 1800 ரூபாயாகும்.

நெல் விளைச்சல்:

நெல் விளைச்சல்

மேல் சொல்லப்பட்டுள்ள முறையில் நீங்கள் சரியான முறையில் பராமரித்து வந்தீர்கள் என்றால் 1 ஏக்கருக்கு தோராயமாக 20 முதல் 22 குவிண்டால் பெறலாம்.

அப்படி என்றால் சாதாரண நெல்லுக்கு 1 குவிண்டலின் விலை 2115 ரூபாய் என்பதால் மொத்தமாக 42,300 முதல் 52,875 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

மொத்த பட்ஜெட்:

  • உழவு To அறுவடை வரை செலவு  – 27,300 ரூபாய் 
  • நெல் விளைச்சல் வருமானம் – 52,875 ரூபாய்

ஆகவே 1 ஏக்கர் நிலத்தில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டால் செலவுகள் அனைத்தும் போக கையில் 25,575 ரூபாய் லாபம் கையில் பெறலாம்.

100 குழி இடம் இருந்தால் 3 மாதத்திற்கு ஒரு முறை 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..எப்படி தெரியுமா.

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement