100 குழி இடத்தில் பயிரிட என்னென்ன பொருட்கள் தேவைப்படும் மற்றும் அதற்கான செலவுகள் எவ்வளவு தெரியுமா.?
நம் முன்னோர்களின் காலத்தில் படித்திருந்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி விவசாயம் செய்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு விரும்புவதில்லை. இதில் விவசாயம் செய்வதற்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். முதலில் இளைஞர்களுக்கு விவசாயம் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தெரிவதில்லை. அதனால் தான் அதனை அலட்சியம் செய்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் 100 குழி இடத்தில் பயிரிட்டு அறுவடை செய்வதற்கான செலவுகள் மற்றும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
100 குழி இடத்தில் பயிரிடுவதற்கு எவ்வளவு செலவாகும்:
உழவு செலவு:
நீங்கள் 100 குழியில் நடவு செய்வதற்கு இரண்டு தடவை உழவு செய்ய வேண்டும். அப்போது தான் அதில் உள்ள செடிகள் எல்லாம் அழிந்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு நடை உழவு செய்வதற்கு 500 ரூபாய் என்றால் இரண்டு தடவை உழவு செய்வதற்கு 1000 ரூபாய் தேவைப்படும்.
நாத்து செலவு:
100 குழியில் நடுவதற்கு 3 கட்டு நாத்து தேவைப்படும். ஒரு கட்டு நாத்தில் 100 புடி நாத்து இருக்கும். ஒரு கட்டு நாத்தின் விலை 500 ரூபாய் அப்போ 3 கட்டின் நாத்தின் விலை 1500 ரூபாய் தேவைப்படும். அதுவே மிசின் நடவு செய்தால் 1 கட்டு நாத்து போதுமானது.
நடவு செலவு:
100 குழி வயலில் நடவு செய்வதற்கு 5 ஆட்கள் வேண்டும்.ஒரு ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 1000 ரூபாய் செலவாகும்.
களை செலவு:
நடவு செய்து 1 மாதத்தில் களை எடுக்க வேண்டும். அதற்கு 5 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 5 ஆட்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஒரு களை எடுத்த பிறகு அடுத்த 45-வது நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கும் 5 ஆட்கள் தேவைப்படும். 1 ஆளுக்கு 200 ரூபாய் என்றால் 5 ஆட்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.
மருந்து செலவு:
நடவு நட்ட 5 நாள் அடி உரம் கொடுக்க வேண்டும். அதற்கு DAP 13 கிலோவும், பொட்டாஷ் 4 கிலோவும் தேவைப்படும். இதனை வாங்குவதற்கு 600 ரூபாய் செலவாகும்.
அடுத்து 15 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டும். அதற்கு DAP 15 கிலோவும், யூரியா 6 கிலோவும் தேவைப்படும். இதற்கு 750 ரூபாய் செலவாகும். அடுத்து 30 வது நாள் தண்ணீர் மருந்து அடிக்க வேண்டியிருக்கும். அதற்கு 750 ரூபாய் செலவாகும்.
இதற்கு இடையில் பூச்சி தொல்லை ஏதும் இருந்தால் அதற்கு தனியாக மருந்து அடிக்க வேண்டியிருக்கும்.
அறுவடை:
மிசின் வைத்து அறுக்கும் போது 1 மணி நேரத்திற்கு 1500 ரூபாய் செலவாகும். 100 குழியை அறுவடை செய்வதற்கு 1/2 மணி நேரம் தேவைப்படும். இதற்கு 750 ரூபாய் தேவைப்படும்.
மேல் கூறப்பட்டுள்ள செலவுகள் மொத்தமாக 7350 ரூபாய் தேவைப்படுகிறது.
வருமானம்:
100 குழியில் பயிரிட்டால் 15 மூட்டை கிடைக்கும். இதனை விற்கும் போது நமக்கு 15,000 ரூபாய் வருமானமாக பெறலாம். இந்த விலையானது நாம் விதைக்கப்பட்டிருக்கும் பயிரை பொறுத்து வருமானம் மாறுபடும்.
ஆக இதற்கு செலவு என்று பார்த்தால் 8,000 ரூபாய் என்று வைத்து கொள்வோம். நமக்கு லாபமாக 7,000 ரூபாய் கிடைக்கும்.
2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |