சோர்வாக இருக்கும் போது உங்களை மகிழ்ச்சிப்படுத்த செய்ய வேண்டியவை

Advertisement

சோர்வாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை

மனிதர்களாக பிறந்த அனைவருமே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. சில நேரத்தில் உடலும் சரி, மனதும் சரி சோர்வாக தான் காணப்படும். வீட்டில் இருக்கும் டென்சன், வேலையில் இருக்கும் டென்சன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதிலிருந்து விடுபடாமல் அப்படியே இருந்தால் உடலில் பல பிரச்சனைகளுக்கு ஆளாகுவீர்கள். அதனால் மன அழுத்தம் நேர்ந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் சோர்வாக இருக்கும் போது என்ன செய்தால் மகிழ்ச்சியாக மாறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சின்ன சின்ன விஷயம்:

நம்மை சுற்றி நடக்க கூடிய சின்ன சின்ன விஷயத்தையும் ரசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பூக்கள் மற்றும் அதனுடைய வாசனை, கலர் போன்றவற்றை ரசிக்க வேண்டும். நீங்கள் கண்களால் பார்க்க கூடிய அனைத்து விஷயங்களையும் ரசிக்க வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் சின்ன சின்ன விஷயத்திலும் சந்தோசத்தை அடைவீர்கள்.

உடற்பயிற்சி: 

சில நேரங்களில் மனது சோர்வாக இருக்காது. உடல்நிலை தான் சோர்வாக இருக்கும். அதனை புத்துணர்ச்சியோடு வைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் நம் உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். அதனால் தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?

நெருக்கமான உறவுகள்:

இன்றைய காலத்தில் உள்ளவர்கள் சோர்வடைந்தாலே நான்கு சுவற்றுக்குள்ளேயே உட்கார்ந்து போனை பார்க்கின்றனர். இதன் மூலம் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. உங்களுக்கென்று நெருக்கமானவர்கள் இருப்பார்கள், அவர்களிடம் நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு மனம் விட்டு பேசலாம். இப்படி பேசுவதால் உங்களின் மனதில் உள்ள கஷ்டங்களை கூறுவீர்கள், இதனால் உங்களின் மன அழுத்தமானது குறைய ஆரம்பிக்கும்.

உதவி செய்யுங்கள்:

மன அமைதியை தான் பலரும் தேடுகிறார்கள், அது எங்கே தேடியும் கிடைக்காது. அவை உங்களிடம் தான் உள்ளது. அதனால் எந்த விஷயத்தை செய்தால் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்களா அதை செய்யங்கள். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு திருப்தியாக இருக்கும். ஏதோ நம்மால் முடிந்த உதவிகளை செய்தோம் என்ற நிறைவு கிடைக்கும்.

இலக்கை குறிக்கவும்:

உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், ஏனென்றால் உங்களுக்கு எப்போதெல்லாம் சோர்வு நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்களின் இலக்கை மனதில் நினைத்தால் உங்களுடைய சோர்வு தீர்ந்து இலக்கை நோக்கி பயணப்பீர்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

Advertisement