உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?

Advertisement

உங்களின் வெற்றிக்கு உதவுவது எது 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும், அது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். இந்ததிறமையினை நாம் வெளிக்காட்டினால் தான் நம்முடைய சக்தி என்னவென்று அறிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் உங்களின் திறமையை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் திறமையானது பள்ளி அல்லது கல்லூரியில் உனக்கு இந்த திறமை இருக்கிறது என்று கூறியிருப்பார்கள். அப்படி இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களுடைய திறமையினை பாராட்டிருப்பார்கள். இவை அப்படியே நீங்கள் பாராட்டியதோடு விடாமல் அதனை சாதனையாக மாற்றுவது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. உங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும்.

திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை:

திறமையை வெற்றியாக மாற்றுவது எது 

உங்களுடைய திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு முயற்சி மற்றும் பொறுமை ரொம்ப அவசியம். ஏனென்றால் உங்களின் திறமையை வெளிப்படுத்துகிறீர்கள் என்றால் அவை ஒரு முறையிலே வெற்றியை அடையாது. நீங்கள் மறுமுறை அதனை தொடர்ந்து செய்வதற்கு முயற்சி அவசியம். அது போல இந்த முயற்சியினை செய்து அதிலிருந்து நீங்கள் ரிசல்ட்டை பெறுவதற்கு பொறுமை ரொம்ப அவசியம். இதனை ஒரு கதை வழியாக தெரிந்து கொள்வோம்.

நாம் பயன்படுத்தும் பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்த பல்பு ஆனது எடிசனின் உதவியாளரால் உடைந்து விட்டது. அப்போது கூட  எடிசன் பொறுமையாக நடந்து கொண்டாராம்.

ஒருவர் குறை கூறினால் அதிலிருந்து வெளிவருவது எப்படி.?

எடிசன் அவர்கள் நண்பர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் மின்சார பல்பை கண்டுபிடித்ததை காட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார். அதில் பல்பை காட்டுவதற்கு தனது உதவியாளரிடம் எடுத்து வர சொன்னார். அப்போது அவர் பல்பை எடுத்து வரும் போது பல்பு உடைந்து விட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தார்கள். ஆனால் எடிசன் மட்டும் எந்த விதமான அதிர்ச்சியும் ஏற்படவில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன்

ஏனென்றால் அவர் அத்தனை தோல்விகளை கடந்து தான் அந்த பல்பை கண்டுபிடித்தார், அதனால் அவருக்கு பெரிதாக தெரியவில்லை. சிறிது நேரத்திலே வேறொரு பல்பை தயாரித்தார். இந்த பல்பை அதே உதவியாளரிடம் எடுத்து வாங்க என்று கூறினார், இதற்கு எல்லாரும் பயந்தார்கள், ஏனென்றால் அவர் தான் பல்பை உடைத்தார், மறுபடியும் அவர்களே பல்பை எடுத்து வர சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு எடிசன் ஒரு முறை எடுத்து வரும் போது தவறு நடந்து விட்டது, ஆனால் மறுபடியும் அவரை எடுத்துவர சொல்வதன் மூலம் பொறுப்பையும், நம்பிக்கையும் ஏற்று கவனமாக வேலை செய்வான் என்றார்.

நீங்கள் உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு தேவைப்படுவது பொறுமை என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement