How to Motivate Yourself
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல் தோல்விகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த தோல்விகளை எல்லாம் கடந்து வந்த பிறகு நீங்கள் வெற்றிக்கான பாதையை தேடி ஓடுகிறீர்கள் என்றால் நிச்சயம் வெற்றியை அடையலாம். இதில் பல பேர் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு தோல்வி வந்து விட்டால் அதிலிருந்து மீண்டு வராமல் அந்த தோல்வியிலேயே கவலை அடைவார்கள்.
உங்களுடைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் உங்களை ஊக்கப்படுத்தி கொள்வது அவசியமானது. நீங்கள் மற்றவர்கள் வந்து ஊக்கப்படுத்துவார்கள் என்று நினைக்க கூடாது. உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வதற்கு என்ன சில ஐடியாக்களை பற்றி அறிந்து கொள்வோம்.
கால அளவு:
நீங்கள் மூன்று வேலை உணவையும் இந்த நேரத்திற்குள் எடுத்துவிட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதே போல் உங்களுடைய லட்சியத்தையும் இவ்வளவு நாட்களுக்குள் அடைந்தே தீருவேன் என்ற முடிவை எடுத்து கொள்ளுங்கள்.
பழக்கம் வைத்து கொள்ளவும்:
உங்களுடைய அன்றாட வேலைகளான உணவு சாப்பிடுவது, பல் தேய்ப்பது போல வெற்றியை நோக்கி ஓடுவதையும் பழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
இடைவெளி:
நீங்கள் வெற்றியை நோக்கி ஓடும் போது இடையில் ஒரு பிரேக் எடுத்து கொள்ளவும். நீங்கள் பிடிப்பவராக இருந்தால் 10 நிமிடம் பிரேக் எடுத்து ரிலாக்சாக இருக்க வேண்டும். வேலை செய்பவராக இருந்தால் 15 நிமிடம் பிரேக் எடுத்து கொள்ளுங்கள்.
தடைகள் வரும் என்று நினைக்க வேண்டும்:
நீங்கள் செய்யும் வேலைகளில் தடைகள் வரும் என்று எதிர்பாருங்கள். நீங்கள் லீவு நாட்களில் மீன் சாப்பிட வேண்டும் என்று கடைக்கு வாங்க போகிறீர்கள் ஆனால் அங்கு மீன் இல்லை, அப்போ என்ன செய்வீர்கள் அடுத்து கரி இருக்கிறதா என்று தேடுவீர்கள் அல்லவா.! அது போல ஒரு விஷயத்தில் தடை வருகிறது என்றால் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று திங் செய்ய வேண்டும்.
திட்டமிட வேண்டும்:
உங்களுடைய இலட்சியத்தை சிறிய சிறிய பகுதியாக பிரித்து கொள்ளுங்கள். அதவாது நீங்கள் மாணவராக இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம். தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு பாட பகுதியாக படியுங்கள். அப்போ இந்த பாடத்தை இன்று முடித்து விட்டோம் இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது என்ற திருப்தியும் அடுத்து செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தும்.
பரிசு:
உங்களுடைய லட்சியத்தில் ஏதவாது நீங்கள் அடியெடுத்து வைத்து அதில் நல்ல ரிசல்ட் இருந்தால் நீங்களே உங்களை பாராட்டி கொள்ளுங்கள். வெளியில் நண்பர்களுடன் சென்று மகிழ்ச்சியாக இருங்கள். உங்களை யார் ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்களுடன் நேரத்தை கழியுங்கள்.
நன்றி:
ஒவ்வொரு நாள் காலையில் எழுந்திருக்கும் போது இந்த வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள். நல்ல எண்ணங்களை வைத்திருப்பதற்கும் நன்றி சொல்லுங்கள். நாம் இந்த காரியம் செய்வதால் என்ன நடக்க போகிறதோ என்று யோசிக்காமல் வேலையை தொடங்குங்கள்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |