ஒருவர் குறை கூறினால் அதிலிருந்து வெளிவருவது எப்படி.?

Advertisement

ஒருவர் குறை கூறினால் என்ன செய்வது

வீடாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி நம்முடைய நிறைகள் தெரிகின்றதோ இல்லையோ நம்முடைய குறைகள் தெரியும்.  இந்த குறைகளை நம்மிடம் நேரடியாகவும் சொல்லுவார்கள், மறைமுகமாவும் கூறுவார்கள்.

குறைகள் கூறியதும், நாம் அவர்களிடம் சண்டை இடுவோம், இல்லையென்றால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று விட்டு விடுவோம். இந்த குறைகளில் இருந்து எப்படி வெளிவருவது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

ஒருவர் குறை கூறினால் என்ன செய்ய வேண்டும்:

சில பேர் நம்மிடம் இருக்கும் குறைகள் மற்றும் நிறைகள் இரண்டையும் கூறுவார்கள், இதனை சில பேர் லேசாக எடுத்து கொள்வீர்கள், சில பேர் அதையே நினைத்து கொண்டு வருத்தப்படுவீர்கள். வருத்தப்படுவதால் எந்த விஷயமும் மாற போவதில்லை. அதனால் மற்றவர்கள் கூறும் குறையை நினைக்காமல் நகர்ந்து விட வேண்டும். அதற்காக நீங்கள் அப்படியே எல்லாத்தையும் விட்டு விட கூடாது.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

ஒருவர் குறை கூறுகிறார்கள் என்றால் அதிலிருக்கும் உண்மையை ஆராய வேண்டும். ஏனென்றால் அதில் உண்மைகள் ஏதும் இருப்பின் அதை மாற்றி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

நாம் கண்ணாடி முன்னடி நின்று எப்படி இருக்கிறோம் என்று பார்த்தால் நாம் எப்படி இருக்கிறமோ அதை தான் வெளிக்காட்டும். அதனால் உங்களின் குணம் எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் மற்றவர்கள் எடை போடுவார்கள்.

மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை சுட்டி காட்டுவது ஒருவிதமான நல்ல பண்பாகவும் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரிடம் இருக்கும் குறைகளை சொல்லாமல் உன்னை போல் யார் செய்ய முடியுமா என்றால் அவர்களை வளர விடவில்லை என்று அர்த்தம். அதுவே மற்றவர்களிடம் சென்று அவள் இப்படி என்று புறம் பேசக்கூடாது. அவர்களிடம் உள்ள குறைகளை நேரடியாக சொல்லி விடலாம்.

சிம்பிளான விஷயம் தாங்க கண்ணாடி முன் நின்று கொண்டிருக்கும் போது நாம் அழகாக காட்டவில்லை என்றாலும் அதன் மீது கோபம் அடைவதில்லை. அது போல தான் ஒருவர் நம்மிடம் குறைகளை கூறினாலும் அவர்கள் மீது கோபம் அடையாமல் அதனை சாதாரணமாக எடுத்து செல்ல வேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றி கொள்ளுங்கள், அதில் உண்மை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement