தேன் பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போது இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Multipurpose of Honey in Tamil

வணக்கம் நண்பர்களே…! நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தேனின் பல்வேறு பயன்பாடுகளை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே நமக்கு பலவகைகளில் பயன்படுகிறது. ஆனால் அவற்றின் பயன்பாடுகளில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே நமக்கு தெரியும். எனவே ஒவ்வொரு பொருளும் நமக்கு எந்ததெந்த வகைகளில் பயன்படுகிறது  என்பதை பொதுநலம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தேன் நமக்கு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தேனின் பல்வேறு பயன்பாடுகள்:

தேனில் உள்ள சத்துக்கள்:

  • பொட்டாசியம் 
  • கால்சியம் 
  • மாங்கனீசு 
  • பாஸ்பரஸ்
  • தாமிரம்
  • நீர்ச்சத்து

உணவுகளில் தேன்:

சர்க்கரைக்கு பதிலாக பல இனிப்பு உணவுகளில் தேன் பயன்படுத்தபடுகிறது. மேலும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம்.

பாலில் டீ போட்டு குடிச்சா மட்டும் பத்தாது..! இந்த விஷயமும் தெரிஞ்சிருக்கணும்..!

முகத்திற்கு தேன்:

முகத்திற்கு தேன்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க தேன் பயன்படுகிறது. தேனை நேரடியாகவோ அல்லது வேறு பொருட்களுடனோ கலந்து முகத்திற்கு அப்ளை செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாகவும் அழகாகவும் மாறும்.

கொசு கடியை நீக்கும்:

தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியா பண்புகள், அரிப்பு மற்றும் எரிச்சலை தடுக்கிறது. எனவே கொசு கடித்த இடத்தில் தேனை சிறிதளவு அப்ளை செய்தால் கொசு கடித்த அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.

தூக்கமின்மையை போக்கும்:

இரவில் தூக்கம் வரமால் அவதிப்படுபவர்கள், 1 டீஸ்பூன் தேனுடன் 1 சிட்டிகை உப்பு கலந்து சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும். எனவே தூக்கமின்மைக்கு தேன் ஒரு தீர்வாக இருக்கும்.

உப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இது தெரியாம சமையலுக்கு பயன்படுத்தாதீர்கள்..

இருமலுக்கு நிவாரணமாக பயன்படுகிறது:

இருமல், தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தேனை சாப்பிட்டு வந்தால் விரைவில் இருமல் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

பதட்டத்தை நீக்கும்:

பதட்டத்தை போக்குவதற்கு தேன் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பதட்டமாக இருக்கும் நேரங்களில் சீமை சாமந்தி டீயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பதட்டம் நீங்கும்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement