Milk Multi Purpose in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். உடனே அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள் அல்லவா..! ஆனால் ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக பாலின் Multi Purpose பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்..!
குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா |
பால் பற்றிய தகவல்:
பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் தேடுவது டீ, காபியை தான். அதனால் பால் எவ்வளவு முக்கியமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் Multi Purpose என்பது என்ன என்று உங்களுக்கு தெரியுமா..?
ஒரு பொருள் ஒரு விஷயத்திற்கு மட்டும் பயன்படாமல் பல விஷயத்திற்கு பயன்பட்டால் அதை தான் Multi Purpose என்று கூறுவார்கள். அந்த வகையில் நாம் பாலின் Multi Purpose பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பாலின் நன்மைகள்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். பாலில் இருக்கும் பல்வேறு சத்துக்கள் நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்து கொள்கிறது. அதைப் பற்றி விரிவாக காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்–> இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
நெஞ்செரிச்சலை தடுக்கும் பால்:
நாம் சில நேரங்களில் காரமான உணவுகளை சாப்பிடும் போது நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். சிலருக்கு எப்பொழுதும் எந்த உணவுகளை சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் உண்டாகும். அப்படி ஒரு நிலையில் ஒரு கிளாஸ் பால் குடித்தால் அது நெஞ்செரிச்சல் குணமாகும்.
பற்களின் ஆரோக்கியத்திற்கு பால்:
பாலில் இருக்கும் அதிக கால்சியம் நம் எலும்புகளுக்கு மட்டும் வலிமையை தருகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடைய பற்களுக்கும் வலிமையை தருகிறது. பாலில் இருக்கும் அதிக கால்சியம் நம் பற்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே |
அழகை மேம்படுத்த பால்:
நாம் பெரும்பாலும் பால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் தான் உதவுகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பால் சரும அழகை மேம்படுத்துவதற்காகவும், சருமத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கும் பால் உதவுகிறது. பாலில் இருக்கும் சத்துக்கள் முகப்பருக்கள் வராமல் தடுக்க, கரும்புள்ளிகளை மறைய செய்ய, முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்து கொள்வது என்று பலவற்றிற்கு உதவுகிறது.
முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த பால்:
முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த பால் முக்கியமான பொருளாக இருக்கிறது. பாலில் உள்ள இயற்கையான மாய்ஸ்சரைசர்கள் உங்கள் தலைமுடிக்கு பெரிதும் உதவுகிறது. இந்த மூலப்பொருள் குறிப்பாக வறண்ட மற்றும் மந்தமான கூந்தலால் தொந்தரவு உள்ளவர்களுக்கு மந்திரம் போல் செயல்படுகிறது. மேலும் முடிக்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்–> உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |