Kuppaimeni Multi Purpose in Tamil
வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் நாம் வாழும் இந்த காலகட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எவ்வளவோ மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதுவும் நாம் வாழும் இந்த உலகம் நவீன உலகமாக இருக்கிறது. இருந்தாலும் நாம் வாழும் உலகம் மாறிவிட்டது என்று சொல்வது உண்மை தான். ஏனென்றால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் ஏதும் அப்போது கிடையாது. இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் எல்லா வசதிகளும் இருந்தும் பல நோய்களை வரவழைத்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவு முறை தான். அந்த காலத்தில் சத்தான உணவுகளை உண்டார்கள்.
ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை தான் உணவாக உட்கொள்கின்றோம். அதாவது “உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு” என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்க..! இன்று நாம் குப்பைமேனி இலை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
குப்பைமேனி இலை:
பொதுவாக ஒரு பொருள் பல விஷயத்திற்கு பயன்படுகிறது என்றால் அதை தான் Multi Purpose என்று சொல்வோம். அந்த வகையில் குப்பைமேனி இலையில் இருக்கும் Multi Purpose என்ன என்று இங்கு காண்போம்.
குப்பைமேனி இலை ஆங்கிலத்தில் Acalypha indica என்று அழைக்கப்படுகிறது. இது பல தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இது தோல் நோய்க்கு மட்டும் மருந்தாக பயன்படுகிறதா என்றால் அது கிடையாது. இந்த குப்பைமேனி இலை வேற எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே |
சரும நோய்களை விரட்ட:
குப்பைமேனியில் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால் இது தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது பருக்கள், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
தலைவலிக்கு மருந்தாக குப்பைமேனி:
குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை கஷாயம் செய்து குடித்து வந்தால் தலைவலி, தலைபாரம், தலையில் நீர்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
குடல் புழுக்களை அழிக்க:
குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் அழியும். மேலும் குடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு குப்பைமேனி மருந்தாக பயன்படுகிறது.
உடல் எடையை குறைக்க குப்பைமேனி:
குப்பைமேனி இலைகளை பறித்து அதை நீரில் கொதிக்க வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையும். உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |