உப்பின் பயன்கள்
உப்பில்லாத சோறு குப்பையில் என்று சொல்வார்கள். சமையலில் உப்பு இல்லாமல் எந்த உணவையும் சமைக்க முடியாது. உணவில் உப்பு அதிகமானாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி சாப்பிட முடியாது. உணவில் ருசியை கொடுப்பதற்கு உப்பு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் இது நாள் வரையிலும் உப்பை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம் இது முற்றிலும் தவறானது. வாங்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
உப்பின் பயன்கள்:
உப்பை உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள நீர் மற்றும் தாது உப்புகளை சமமாக வைக்க உதவுகிறது. தண்ணீர் தாகத்தை தூண்டுவதற்கு பயன்படுகிறது. மேலும் உமிழ் நீர் சுரப்பதற்கும் பயன்படுகிறது.
தொண்டை வலி ஏற்பட்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்து கரைய விட வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் தொண்டை வலி சரியாகிவிடும்.அழகை மேம்படுத்த உப்பு எவ்வாறு பயன்படுகிறது:
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்
Salt For Skin Whitening:
உப்பை பயன்படுத்தி கலரை அதிகப்படுத்த முடியும். இதற்கு சிறிதளவு தண்ணீரில் உப்பு 2 தேக்கரண்டி சேர்த்து கரைய விடவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு உப்பு:
தலையில் இருக்கும் செதில்களைத் தளர்த்தவும், நீக்கவும் உப்பு உதவுகிறது. இந்த மூலப்பொருள் அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் பொடுகு பிரச்சனையை தடுக்கிறது.
ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு சிறிதளவு சேர்த்து கரைய விடவும். இந்த தண்ணீரை பயன்படுத்தி தலையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
சமையலுக்கு உப்பு:
சமையலில் உப்பு இல்லாமல் எந்த உணவும் ருசியாக இருக்காது.
வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?
ஆன்மிகத்தில் உப்பு:
உப்பு, மிளகாய் பயன்படுத்தி திருஷ்டி சுற்றினால் திருஷ்டி நீங்கி விடும். அதுமட்டுமில்லாமல் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து குளித்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.உப்பை பயன்படுத்தி வீட்டில் பணவரவை அதிகரிக்க முடியும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றது அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்
பாத்திரம் துலக்க உப்பு:
பித்தளை பாத்திரங்களை பளபளப்பாக மாற்றுவதற்கு உப்பை பயன்படுத்தலாம். உப்பில் சிறிதளவு புளி, கோலமாவு சேர்த்து பித்தளை பாத்திரத்தை துலக்கி தண்ணீர் ஊற்றி கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |