உங்க வீட்ல மணத்தக்காளி செடி இருக்கா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Multipurpose Black Nightshade in Tamil

நாம் அனைவருமே வீட்டில் நிறைய பூச்செடிகள், காய்கறி செடிகள், மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருவோம். ஏனென்றால் நம் அன்றாட தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று. அதுமட்டுமில்லாமல் அத்தகைய செடிகள் எந்த விதமான கெமிக்கல் பொருட்களும் சேராமல் இயற்கையாக நம் வீட்டில் வளர்க்கக்கூடியது. அப்படி நாம் வளர்க்கும் செடிகளில் உள்ள காய்களையோ அல்லது பழங்களையோ பயன்படுத்துவோம். ஆனால் அவற்றின் ஒரு சில விஷயங்கள் மட்டுமே நமக்கு தெரிகிறது. அவைகள் நமக்கு பலவகைகளில் பயன்படுகிறது என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அந்த வகையில் உங்கள் வீட்டில் மணத்தக்காளி செடி இருந்தால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். அதாவது மணத்தக்காளி எதற்கெல்லாம் பயன்படுகிறது..? என்னென்ன வகைகளில் இதனை பயன்படுத்தலாம்..? இப்படி பல விஷயங்களை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்க வீட்ல சுண்டைக்காய் செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

 

மணத்தக்காளி எதெற்கெல்லாம் பயன்படுகிறது..?

Multipurpose Black Nightshade in Tamil

மணத்தக்காளி செடி:

மணத்தக்காளி செடி இந்தியா மற்றும் ஆப்ரிக்காவில் அதிகமாக காணப்படும் தாவரமாகும். இச்செடி சுமார் ஒரு 3 அடி வரை வளரும் ஒரு சிறிய தாவரமாகும். இவற்றின் இலைகள் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். மணத்தக்காளியின் பூக்கள் ஆனது 5 இதழ்களுடன் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

மணத்தக்காளி பழங்கள்:

மணத்தக்காளி பழங்கள்

மணத்தக்காளி பழங்கள் பட்டாணியை விட சிறிய உருவத்தில் இருக்கும். இதனை ஊதாநிறம் கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும். இதனை சிறு வயதில் அனைவருமே சாப்பிட்டு இருப்போம்.

இதனை சுக்குடி பழம் என்று அழைப்பார்கள். மணத்தக்காளி காயை சமைத்து சாப்பிட்டால் மலசிக்கல் தீரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக இருக்கும் வாத நோய்கள், கபநோய்கள் போன்றவை விரைவில் குணமாகும்.

மணத்தக்காளியின் பெயர்கள்:

  • தாவரவியல் பெயர் – சோலனம் நிகரம்
  • ஆங்கில பெயர் – பிளாக் நைட் ஷேட்
  • மலையாளப் பெயர் – மணி தக்கலி, கமஞ்சு செட்டு
  • தெலுங்கு பெயர் – பெட்டகாஷா பண்ட்லா கூரா, காக்கி சொப்பு
  • கன்னடப் பெயர் – கேஜ் சொப்பு
  • ஹிந்தி பெயர் – மகோய்
உப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இது தெரியாம சமையலுக்கு பயன்படுத்தாதீர்கள்..

மணத்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் மணத்தக்காளியில் சுமார் 68 கலோரிகள், 20.2 மி.கி இரும்பு சத்து, 8.9 கார்போஹைட்ரேட், 2.1 கிராம் தாதுக்கள், 5.9 கிராம் புரதம், 1.0 கிராம் கொழுப்பு, 410 மி.கி கால்சியம், 70 மி.கி பாஸ்பரஸ் போன்றவை உள்ளது.

சமையலுக்கு மணத்தக்காளி:

மணத்தக்காளி சூப்

சமையலில் மணத்தக்காளி சூப், மணத்தக்காளி வத்தல் குழம்பு, மணத்தக்காளி பொரியல், மணத்தக்காளி தொக்கு, மணத்தக்காளி கீரை கூட்டு போன்ற வகைகளில் மணத்தக்காளியை சமைத்து சாப்பிடலாம்.

நோய்களை தீர்க்கும் மணத்தக்காளி:

 multipurpose of manathakkali in tamil

வயிற்று புண்:

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடலில் ஏற்படும் வயிற்று புண், வாய்ப்புண் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

அப்படி வயிற்று புண் மற்றும் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரையை தினமும் மதிய உணவில் மணத்தக்காளியை ரசமாகவோ, கூட்டாகவோ சமைத்து கொடுப்பதன் மூலம் விரைவில் அல்சர் குணமாகும்.

சளியை தீர்க்கும்:

மணத்தக்காளி வத்தலை அடிக்கடி குழம்பாக வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் இருக்கும் சளி வெளியேறும்.

உடல் சூட்டை தணிக்கும்:

அதிக உடல் சூட்டால் பாதிக்கப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் வலி, தோல் பிரச்சனையும் நீங்கும்.

எல்லாருக்கும் பிடிக்கும் மணத்தக்காளி கீரை பொரியல்..!

மணத்தக்காளி இலைச்சாறு மற்றும் பொடியின் பயன்கள்:

விஷக்கடிகளுக்கு மணத்தக்காளி இலையின் சாறு மற்றும் பொடியினை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிறுநீர் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement