தமிழகத்தில் புதிய மின் கட்டணம்: எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு?

Tn electricity bill High increase useful 2022

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் 2022

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அது குறித்த தகவல்களை அதாவது எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? என்பதை பற்றி நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டணம் 2022 பற்றிய அறிவிப்பு:

  • தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வவோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
  • அதனத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்.
  • தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். சரி வாங்க இப்பொழுது தமிழ் நாட்டின் புதிய மின் கட்டணம் தொகை எவ்வளவு என்று பார்க்கலாம்.

புதிய மின் கட்டணம் 2022: Tn electricity bill High increase useful 2022

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குடிசை இணைப்பு முதல், உயர் அழுத்த மின்சாரம் பெரும் தொழிற்சாலைகள் வரை, உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

தமிழகத்தில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மின் கட்டணத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது நடைமுறையிலிருக்கும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும். அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.

மாதம் யூனிட் புதிய மின் கட்டணம் 2022
இரண்டு மாதங்களுக்கு  100 யூனிட் வரை கட்டணம் இல்லை 
இரண்டு மாதங்களுக்கு  101-200 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.27.50
இரண்டு மாதங்களுக்கு  300 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.72.50
இரண்டு மாதங்களுக்கு  400 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.147.50
இரண்டு மாதங்களுக்கு  500 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.297.50
இரண்டு மாதங்களுக்கு  600 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.155
இரண்டு மாதங்களுக்கு  700 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.275
இரண்டு மாதங்களுக்கு  800 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.395
இரண்டு மாதங்களுக்கு  900 யூனிட் உபயோகிப்பவர்களுக்கு ரூ.565

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com