தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு அட்டவணை

breakfast program in government school food menu in tamil

காலை சிற்றுண்டி திட்டம்

கடந்த மே 7 ஆம் தேதி சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி இன்று (15.09.2022) வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்த உணவு திட்டத்தில் என்னன்னே உணவு வகைகள் என்பதை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ சிற்பி திட்டம் என்றால் என்ன? விளக்கம்!

காலை சிற்றுண்டி உணவு அட்டவணை:

மதிய உணவு திட்டத்தை காமராஜர்  அவர்கள் 1957-ல் அறிமுகம் செய்தார். மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் 1989-ல் கருணாநிதி அவர்களால் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து கலவை சாதம் திட்டத்தை ஜெயலலிதா அவர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனை தொடர்ந்து காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அரசு பள்ளியில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையை குறைப்பதற்காகவும், எந்த குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க பட கூட என்பதற்காகவும் இத்திட்டம் அமலுக்கு வந்தது.

இத்திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,000 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் காலை 05.30 மணிக்கு சமைக்க ஆரம்பித்து காலை 07.45 மணிக்கு சமைத்து முடித்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு காலை 08.15 மணி முதல் 08.45 மணி வரை உணவை கொடுத்திருக்க வேண்டும்.

நாள்  உணவு  உணவு சாப்பிடும் நேரம் 
திங்கள்கிழமை உப்புமா & காய்கறி சாம்பார் 08.15 AM – 08.45 AM 
செவ்வாய்க்கிழமை காய்கறி கிச்சடி
புதன்கிழமை பொங்கல் & காய்கறி சாம்பார்
வியாழக்கிழமை  உப்புமா & காய்கறி சாம்பார் 
வெள்ளிக்கிழமை  கிச்சடி & கேசரி 

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News