சமையல் எண்ணெயின் விலை குறைவு
நண்பர்களே வணக்கம்..! இன்று அனைவருக்குமே ஒரு முக்கிய தகவலை கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அதை தெரிந்து கொள்வதற்கு முன் உங்கள் வீட்டில் சமையலுக்கு அதிகம் பயன்படும் பொருள் எது சொல்லுங்கள். பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு அதிகம் பயன்படும் பொருள் என்றால் அது எண்ணெய் தான். காரணம் எண்ணெய் இல்லாமல் சமையலே செய்ய முடியாது. அப்படி நாம் எப்படி எண்ணெயை அதிக அளவு பயன்படுத்துகிறோமோ அதேபோல எண்ணெயின் விலையும் அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது எண்ணெயின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சமையல் எண்ணெயின் விலை குறைவு..! காரணம் என்ன..?
சமையல் எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளின் விலை வீழ்ச்சிக்கு மத்தியில், டெல்லியில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் விதைகளுக்கான விலை சனிக்கிழமை அன்று சரிந்துள்ளது.
பொதுவாக உள்நாட்டு சந்தையில் சோயாபீன் விதைகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் சோயாபீன் விவசாயிகள், மத்திய பிரதேசத்திற்கு சோயாபீன்களை விற்கும் அளவுக்கு விலையின் நிலை மோசமாக உள்ளது. இதுவே சோயாபீன் எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அடடே இது அல்லவா ஆபர் என்று சொல்லும் அளவிற்கு 61 ரூபாயில் ஜியோவின் அதிரடியான திட்டம் |
சீன பன்னாட்டு நிறுவனமான (Capco) காண்ட்லா துறைமுகத்தில் உள்ள ஆலையில் இருந்து ஜூன் 30 வரை நிலையான வரியில், நம்பர் 1 தரமான சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெயை மொத்தமாக விற்பனை செய்வதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிக MRP இருப்பதால், வாங்குவோர் இந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய் குறைவின் ஆதாரமாக, சூரியகாந்தி எண்ணெய் விலை ஒரு வருடத்திற்கு முன்பு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது சூரிய காந்தி எண்ணெயின் விலை டன் ஒன்றுக்கு 940 ரூபாயாக உள்ளது என்று கூறப்படுகிறது.
Latest News👉 Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |