வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை..மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Updated On: March 16, 2024 3:07 PM
Follow Us:
Indian government 25 dog ban in india
---Advertisement---
Advertisement

Indian Government 23 Dog Ban in India

இன்றைய காலத்தில் வீட்டிற்கு வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். இந்த நாய்களை வளர்ப்பதன் மூலம் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கிறது, நன்றியுள்ளதாகவும் இருக்கிறது என்பதற்க்காக வளர்க்கிறார்கள். சில பேருக்கு நாய் வளர்ப்பது பிடித்தமான செயலாக இருக்கும் அதனால் வளர்ப்பார்கள். ஒரு சில வருடத்திற்க்கு முன்பார்த்தால் யாராவது ஒருத்தர் வீட்டில் நாய் இருக்கும், ஆனால் இன்றைய காலத்தில் ஒரு தெருவுக்கு சென்றாலே குறைந்தது 20 நாய்களாவது இருக்கிறது. இதில் இந்திய அரசாங்கம் ஆனது 23 நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. அதனை பற்றி காண்போம் வாங்க..

Indian Government 23 Dog Ban in India:

ஊருக்கு ஒரு நாய் இருந்த காலம் போகி வீட்டிற்கு ஒரு நாய் என்றாகிவிட்டது. இந்த நாய்களை நமது பாதுகாப்பிற்காக வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போது நம்முடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியதாக இருக்க கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலும் நாய்கள் ஆனது ரோட்டில் செல்பவர்களை துரத்துகிறது, அதுமட்டுமில்லாமல் கடித்தும் விடுகிறது. அதனால் அரசானது சில கொடூரமான நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.

23 நாய் இனங்களை வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தலைசிறந்த இந்திய நாட்டு நாய்கள்..!

 ஆனால் சில நாய் இனங்கள் மனித உயிர்களை பறிக்க கூடியதாக இருக்கிறது. அதனால் தான்  மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டியலில் உள்ள தடைசெய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை செய்யப்பட்ட நாய்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்கள், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்கு அவற்றிற்கு கருத்தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்கள்:

1.பிட்புல் டெரியர்
2. தோசா இனு
3. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
4. ஃபிலா பிரேசிலிரோ
5. டோகோ அர்ஜென்டினோ
6. அமெரிக்கன் புல்டாக்
7. போஸ்போல்
8. கங்கல்
9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
10. காகசியன் ஷெப்பர்ட் நாய்
11. தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய்
12. டோர்ன்ஜாக், சர்ப்லானினாக்
13. ஜப்பானிய தோசா மற்றும் அகிதா
14. மாஸ்டிஃப்ஸ்
15. ராட்வெய்லர்
16. டெரியர்கள்
17. ரோடீசியன் ரிட்ஜ்பேக்
18. உல்ஃப் நாய்கள்
19. கனாரியோ
20. அக்பாஷ்
21. மாஸ்கோ காவலர்
22. கேன் கோர்சோ
23. பந்தோக் ஆகிய வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now