தலைசிறந்த இந்திய நாட்டு நாய்கள்..!

Advertisement

Best Indian Native Dog Breeds in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் இந்தியாவின் தலைசிறந்த நாய்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நம் அனைவருக்குமே வீட்டில் நாய் வளர்க்க பிடிக்கும். நம் நாட்டில் பல நாய் வகைகள் உள்ளது. இருந்தாலும், நாம் அனைவரும் விரும்புவது வெளிநாட்டு நாய் இனங்களை தான். வெளிநாட்டு நாய்கள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நன்றாக இருப்பதால் பெரும்பாலும் வெளிநாட்டு நாய்களை தான் தேர்வு செய்கிறோம்.

நன் இந்திய நாட்டிலும் தலைசிறந்த நாய் இனங்கள் உள்ளது. அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Top Dogs in India in Tamil:

சிப்பிப்பாறை நாய் :

சிப்பிப்பாறை நாய்

சிப்பிப்பாறை என்பது தென் இந்தியாவை சேர்ந்த நாய் இனமாகும். இந்நாய் இனம் வேட்டையாடும் நாய்களின் பூர்வீகமாக திகழ்கிறது. சிப்பிப்பாறை நாய்கள், மதுரை மாவட்டத்திற்கு அருகில் உள்ள சிப்பிப்பாறை என்னும் ஊரில் வாழ்ந்த அரச குடும்பத்தினரால் வளர்க்கப்படுகின்றன. இந்நாய்கள் பெரும்பாலும்,  காட்டுப்பன்றி, மான் மற்றும் முயல் போன்றவற்றை வேட்டையாட வளர்க்கப்பட்டு வந்தது. அதன் பிறகு, அரச குடும்பத்தினரின் கௌரவத்தின் அடையாள சின்னமாகவும் இருந்தது.

Indian Pariah Dog (நாட்டுநாய்):

Indian Pariah Dog

இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரிய நாயாக திகழ்கிறது Indian Pariah Dog.  இந்த நாய் டிங்கோ எனப்படும் காட்டு நாய்களுடன் ஒத்து காணப்படுகிறது. இந்நாய்களின் பூர்வீக இடம் எது என்பது இன்றளவும் தெரியவில்லை. இது, இந்திய துணைக் கண்டத்தில் இயற்கையாக காணப்படுகிறது. பெரும்பாலும் இந்த நாய்கள், நகர்ப்புற இந்தியத் தெரு நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பைக்கில் செல்லும் போது நாய்கள் ஏன் துரத்துகிறது.?

முதொல் நாய் அல்லது கேரவன் நாய்:

முதொல் நாய்

முதொல் நாய் அல்லது கேரவன் நாய் என்பது, ஒரு இந்திய நாய் இனமாகும். இந்நாய்கள் உலகில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. தக்காணப் பீடபூமியில் வாழும்  கிராம மக்கள் இந்நாய் இனங்களை கர்வானி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இவர்கள் இந்நாய்களை பாதுகாப்பிற்காகவும், வேட்டையாடுவதற்காகவும் வளர்த்து வருகிறார்கள்.

இந்திய கென்னல் கிளப் (KCI) மற்றும் இந்திய தேசிய கென்னல் கிளப் (INKC) இந்த நாய்களுக்கு பல்வேறு பெயர்களை வைத்து அழைத்தார்கள். அதாவது, INKC ஆனது, இந்நாய் இனங்களை முதொல் நாய் என்றும், KCI ஆனது, கேரவன் நாய் என்று அழைத்து வந்தார்கள்.

இராம்பூர் வேட்டைநாய் (Rampur Greyhound):

இராம்பூர் வேட்டைநாய்

இந்நாய் இனங்கள் வட நாட்டில் உள்ள இராம்பூர் என்ற இடத்தினை பூர்விகமாக கொண்டது. இந்த இடம் கிட்டத்தட்ட டெல்லி மற்றும் பெரலிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அக்காலத்தில் அங்கு வாழ்ந்த ராஜாக்களின் செல்ல நாயாகவும் Rampur Greyhound வளர்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்நாய்கள் வேட்டையாடுவதற்கு மட்டுமின்றி, சிங்கம் போன்ற பெரிய மிருகங்களில் இருந்து பாதுகாக்கும் பாதுகாவலாகவும் விளங்கியது.

புல்லி குட்டா (Indian Mastiff Dog):

indian mastiff dog

புல்லி குட்டா என்று அனைவராலும் அறியப்படும் இந்த Indian Mastiff Dog இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை பூர்விகமாக கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் தோன்றிய ஒரு வகை பெரிய நாய் ஆகும். இந்நாய் இனங்கள் பெரும்பாலும் பஞ்சாப் இடங்களில் காணப்படுகிறது. இவை, வேட்டையாடுவதற்கு மட்டுமின்றி காவலுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, நாய் சண்டைகளுக்காகவும் வளர்க்கப்பட்டு வந்தது.

ராஜபாளையம் நாய்:

ராஜபாளையம் நாய்

நம் அனைவருக்கும் தெரிந்த நாய் இனங்களில் ராஜபாளையம் நாயும் ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையம் ஊரை பூர்விமாக கொண்டது. பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிரான போரில், அவர்களின் குதிரை படைக்கு எதிராக ராஜபாளையம் நாய்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த இனங்களில், வெள்ளை நிற சிவந்த மூக்கு தோன்றம் உடைய நாய்கள் சிறப்பு வாய்ந்ததாகும்.

உலகின் மிக ஆபத்தான நாய்கள்

கோம்பை நாய் (Kombai Dog):

கோம்பை நாய்

கோம்பை நாய் என்பது தமிழக நாய் இனங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவின் மிகச்சிறந்த வேட்டையாடும் நாய் இனமாகும். அதுமட்டுமில்லாமல், இது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, காட்டெருமை, காட்டு பன்றி மற்றும் மான் போன்ற விலங்குகளை வேட்டையாட வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நாய்கள், கருப்பு நிற வாய்களுடனும் பழுப்பு நிற உடலுடனும் காணப்படுகிறது. ஆனால், சமீப காலங்களில் இந்த நாய்கள் அழிந்து வருவதாகும் கூறப்படுகிறது.

Gaddi Dog:

gaddi dog

Gaddi என்று அழைக்கப்படும் இந்நாய் இனங்கள் இமயமலை பகுதிகளில் அதிகமாகவும் பரவலாகவும் காணப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த gaddi என்ற பழங்குடியினர் பெயரே இந்நாயின் பெயர் ஆகும். இவ்வகை இனங்கள் பழங்காலத்தில் இருந்தே சிறுத்தை போன்ற கொடிய மிருகங்களில் இருந்து பாதுக்காக்க வளர்க்கப்பட்டு வருகிறது. கால் நடைகளை திறமையாக பாதுகாப்பதில் இது சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

நாய்கள் பற்றிய தகவல்

கன்னி நாய் (Kanni Dog):

Kanni Dog

கன்னி நாய் தமிழ்நாட்டை சேர்ந்த நாய் இனமாகும். இது தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. சிப்பிப்பாறை நாய் இனங்களை சேர்ந்த வேட்டையாடும் நாய் இனமாகும். இந்நாய்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியது. இந்நாய்கள் பெரும்பாலும் காட்டு முயல் மற்றும் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், இந்நாய்கள் சமீப காலமாக அழிந்து வரும் நிலையில் உள்ளது.

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement