ராஜநாகம் பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

Advertisement

Rajanagam Patriya Suvarasiyamana Thagavalgal In Tamil

பொதுவாக பாம்புகள் என்றாலே படையே நடுங்கும். எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் பாம்பு என்றால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அதில் சார பாம்பாக இருந்தால் என்ன, நாக பாம்பாய் இருந்தால் என்ன ? பாம்புகளில் நிறைய இனங்கள் இருக்கின்றன. அதில் பாம்புகளுக்கே ராஜாவாக இருக்க கூடிய ராஜ நாகம் பற்றி தெரியுமா ? தனது கம்பீரமான உடல் அமைப்பால் பார்ப்பவர்களை மிரள வைக்கும் இந்த பாம்புகளின் குணத்தையும் உண்மைகளையும் தெரிந்துகொள்வோம் வாங்க.

ராஜ நாகத்தின் குணாதிசயங்கள்  : 

raajanaagam patiya thagaval

  • பார்ப்பதற்கே பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கும் இந்த ராஜ நாகம்தான் பாம்பு வகைகளில் மிகவும்  கொடிய விஷத்தை கொண்டது.
  • இது மிகவும் அடர்த்தியான காட்டு பகுதிகளில் வசிக்கவே விரும்புகின்றன.
  • ராஜ நாகம் தன் இறைகளை வாசனை வைத்து தான் கண்டுபிடிக்கிறது. அதன் நாக்கு பகுதியில் வாசனைகளை நுகரும் தன்மை உள்ளது. 300 அடி தூரத்தில் இருக்கும் இரையை  கூட இதனால் கணிக்கமுடியும். அந்த இறஇரையின்  எடை மற்றும் தோற்றத்தை கணிக்கக்கூடியது.
  • மற்ற பாம்புகளை காட்டிலும் ராஜநாகம் மிகவும் தந்திரமான புத்தியுடையதாக இருக்கிறது. ராஜ நாகம் தன் இனத்தையே இறையாய் உட்கொள்ளக்கூடியது. இது மற்ற பாம்புகளையும் உணவாக உட்கொள்ளும். ராஜநாகம் ஒருதடவை உணவை உண்டபின் இரை கிடைக்காவிடிலும் ஒரு வாரம் உணவில்லாமல் வாழும் திறனை கொண்டவை.
  • பகலில் மட்டுமே தன் இரையை இது தேடுகிறது. தன் இரையை தவிர வேறு எந்த உயிரினத்தையும் இது வேட்டையாடுவதில்லை. ஆனால் தன்னை யாரும் தாக்க நேர்ந்தால் தன் பயமுறுத்தும் தோற்றத்தை கொண்டு தரையில் இருந்து 6 அடி நீளத்திற்கு படம் எடுத்து எதிர்பார்க்காத நேரத்தில் சீறி எதிரியின் உடலில் விஷத்தை செலுத்தக்கூடியது.
  • ஒருமுறை இது விஷத்தை செலுத்தினால் அதில் 200 கிராம் இருந்து 500 கிராம் வரை உள்ளது. ஒரு மனிதனை கொள்ள 20 கிராம் விஷமே போதுமானது. இவ்வளவு நஞ்சு உள்ள ராஜநாகம் ஒரு மனிதனை கொத்தினால் அடுத்த செகண்டே அவன் கோமா ஸ்டேஜிக்கு போய்டுவாங்கலாம்.
  • ராஜ நாகம் ஒரு யானையை கடித்தால் சரியாக மூன்று மணி நேரத்தில் அந்த யானை இறந்துவிடும். இப்படிப்பட்ட கொடிய விஷத்தை முறிக்க 2 மருந்துகள் மட்டுமே கண்டுபிடிக்க பட்டுள்ளன. அதுவும் எளிதில் கிடைக்க கூடியதும் இல்லை. இதுவரை ராஜநாகம் கடித்து யாரும் பிழைக்கவில்லை.
  • ராஜ நாகம் 16 இருந்து 18 ஆடி நீளம் வரை வளரக்கூடியவை. ஒரு வருடத்திற்கு 5 முறை தன் தோலை உரிக்கின்றன.

ராஜநாகத்தின் இனப்பெருக்கம் :

  • ஆண் ராஜ நாகமும் பெண் ராஜநாகமும் ஜோடியாகவே எப்போதும் இருக்க கூடியவை. தான் வசிக்கும் இடத்தில்   வேறு ஆண் ராஜ நாகம் வந்தால் இடத்திற்கு சொந்தமான ஆண் ராஜ நாகம் புதிதாக வந்த ஆண் ராஜ நாகத்திடம் சண்டையிடுமாம்.
  • ஒருவேளை புதிய ராஜநாகம் பழைய ராஜநாகத்திற்கு  அடங்கி போகவில்லை என்றால் பழைய ராஜ நாகம் புதிய ராஜநாகத்தை கொன்றுவிடுமாம். ஒருவேளை புதிய ராஜ நாகம் பழைய ராஜநாகத்தை கொன்றுவிட்டால் புதிய ராஜ நாகம் பெண் ராஜநாகத்தை நெருங்கும்போது அவ்வளவு சீக்கிரத்தில் பெண் ராஜநாகம் புதிய ஆண் ராஜநாகத்தை ஏற்றுக்கொள்ளதாம். அப்படி கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் புதிய ஆண் ராஜ நாகம் பெண் ராஜ நாகத்தை கொன்றுவிடுமாம்.
  • ராஜநாகம் முட்டையிட்டு குஞ்சுபொரிக்க கூடியவை. இதன் இணைசேர்க்கை ஜனவரியில் இருந்து மார்ச் மாசம் வரை நடக்கின்றன. பின் பெண் ராஜநாகம் ஏப்ரலில் இருந்து மே மாதம் வரை முட்டையிடுகின்றன.
  • குஞ்சு பொரித்தபின் பெண் ராஜநாகத்தையும் தன் குஞ்சுகளையும் எந்த உயிரினமும் நெருங்காதவாறு ஆண் ராஜ நாகம் பாதுகாக்கும்.

ராஜநாகத்தின் ஆயுட்காலம் :

குஞ்சி பொறித்த சில நாட்களிலே தாய் ராஜ நாகம் குஞ்சிகளை பிரித்துவிட்டுடும். தன் விஷத்தன்மை வைத்தே இந்த குட்டி ராஜநாகங்கள் தன்னை காத்துக்கொள்கின்றன. எனினும் கழுகுகலால் குட்டி ராஜநாகங்கள் அதிகம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. இதனால் தான் ராஜ நாகங்களின் எண்ணிக்கையும் குறைவு. ராஜநாகங்கள் பொதுவாக 20 ஆண்டுகள் வாழ கூடியவை.

 

பாம்புக்கு காது கேட்காது என்றால், அது எப்படி மகுடி சத்தத்திற்கு நடனமாடுகிறது..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement