வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜாகுவார் என்றால் என்ன.?

Updated On: April 4, 2024 2:57 PM
Follow Us:
jaguar in tamil
---Advertisement---
Advertisement

Jaguar in Tamil

நம்மில் பெரும்பாலானவர்கள் விலங்குகளை வளர்க்கின்றோம். இந்த விலங்குகள் வளர்ப்பதில் நமக்கு பிடித்த விலங்குகளை தான் வளர்ப்போம். அதில் பூனை, நாய்க்குட்டி போன்றவை வளர்ப்பார்கள். இந்த இனங்களில் புலி, சிங்கம், சிறுத்தை இது போன்ற இனங்களை தான் தெரியும்.

நமக்கு தெரியாத எத்தனையோ விலங்குகள் இருக்கின்றது, அதனை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஜாகுவார் என்றால் என்ன, அதன் உடல் அமைப்பு போன்றவை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Jaguar Meaning in Tamil:

Jaguar என்பது பூனை இனத்தை சேர்ந்தது. சிறுத்தை, புலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருபப்து ஜாகுவார் தான்.

ஜாகுவார் என்றால் என்ன.? 

Jaguar in tamil images

ஜாகுவார் என்பது சிறுத்தையை போல இருக்கும் இன்னொரு உயிரினம். இவை பெரிய தலையையும், தாடையையும் கொண்டதாக இருக்கும். கால்களும் அதன் வால்களும் சிறியதாக இருக்கும். இவை உருவத்தில் பெரியதாகவும்,முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

இந்த ஜாகுவார் என்பது அமெரிக்க தாயகமாக கொண்ட பெரும்பூனை இனமாகும். சிங்கம், புலிக்கு அடுத்தபடியாக உள்ள பூனை இனம் தான் ஜாகுவார்.

நாய்கள் பற்றிய தகவல்

இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது. அரிசோனாவில் உள்ள அறியப்பட்ட இனத் தொகையைத் தவிர, இந்தப் பூனையினம் 1900ஆம் ஆண்டுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது.

உடல் அமைப்பானது புள்ளிகள் கொண்டதாகவும், பார்ப்பதற்கு அப்படியே சிறுத்தை போல இருக்கும். இவை உருவத்தில் பெரியதாகவும், முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனாலும் இதன் இருப்பிடம் மற்றும் குணங்கள் போன்றவை புலி போலவே இருக்கும். காடுகள் இவை வசிப்பதற்கு பிடித்தவையாக இருக்கிறது. இருந்தாலும் காடுகள் நிறைந்த திறந்தவெளி தினை நிலங்களிலும் வாழ்கின்றன. இந்த விலங்கானது நீச்சலை விரும்ப கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் பதுங்கி இருந்த பாய கூடிய ஒன்றாக இருக்கிறது.

இவை உயிர் வாழ்வதற்காக இரையை தேடும் ஊனுண்ணியாக இருக்கிறது.

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now