பாம்புகளை ஈர்க்கும் செடிகள் ….இந்த செடிகளை உங்கள் வீட்டில் மறந்தும் வைக்காதீர்கள்

Advertisement

Pambugaluku Piditha Sedigal In Tamil

பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என சில செடிகளை நாம் வீட்டில் வளர்கிறோம். ஆனால் அதனால் வரும் விளைவுகள் நமக்கு தெரிவதில்லை. சில செடிகள் பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால் அது விஷ தன்மை உள்ள செடியாக கூட இருக்கலாம். அதனால் ஒவ்வொரு செடி வீட்டில் வளர்ப்பதற்கு முன்பு அதன் பயன்கள் என்ன தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு வீட்டில் வளர்ப்பது நல்லது. இன்னும் சில செடிகள் வீட்டில் வைப்பதனால் விஷ தன்மை உள்ள உயிரினங்களை ஈர்க்கும் வகையிலும் அமையும். சில செடிகள் பாம்புகளுக்கு பிடித்த செடிகளாக இருக்கின்றன.   பாம்புகளுக்கு பிடித்த செடிகளை வீட்டில் வைப்பதனால் பாம்பு வீட்டிற்க்குள் வரும் அபாயம் உண்டு. இந்த பதிவில்  பாம்புகளுக்கு பிடித்த செடி எது என தெரிந்துகொள்ளுங்கள்.

பாம்புகளுக்கு மிகவும் பிடித்த செடிகள் :

pambugal veetil varamal irukka 

  • வீட்டின் முன்பு வாசனை நிறைந்த செடிகள் வளர்கிறீர்கள் என்றால் அடிக்கடி  செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். இல்லையெனில், பாம்புகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
  • சில செடிகள் வாசனை பாம்புகளுக்கு பிடிப்பதில்லை. ஆனால் சில செடிகளின் வாசனை பாம்புகளுக்கு மிகவும் பிடிக்கின்றன. அதில் ஒன்று தான் சந்தன மரம். சந்தன மரம் வாசனையாக இருக்கும்  என்பதற்காக சில பணக்காரர்கள்  வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால் இது தவறு. சந்தன மரம் குளிர்ச்சியுள்ளவை. அது இருக்கும் இடம் குளிர்ச்சியாக இருக்கும். பாம்புகளுக்கு குளிர்ச்சியான மற்றும் வாசனை நிறைந்த இடங்கள் தான் மிகவும் பிடிக்கும். அதனால் இது பாம்புகளை எளிதாக ஈர்க்கிறது.
  • பாம்புகளுக்கு இயல்பாகவே வாசனை நுகரும் தன்மை உள்ளது. அதனால் வாசனை உள்ள மரங்கள் செடிகள் பூக்களை பாம்புகள் விரும்புகின்றன. அவைகள் இருக்கும் இடத்தில்  வசிக்க விரும்புகின்றன. அந்த வகையில் எலுமிச்சை மரம் இது வாசனை மிகுந்த மரம். இந்த மரத்தில் காய்க்கும் எலுமிச்சை பழத்தை உன்ன வரும் பறவைகள், அணில்கள் போன்ற உயிரினங்களை இரையாக்குவதற்காக பாம்புகள் எலுமிச்சை மரம் இருக்கும் இடத்திற்கு வருகின்றன.
  • மல்லிகை செடி இது மிகவும் வாசனையை பரப்பும் நல்ல மணத்தை கொண்டது. அதனால் இந்த மல்லிகை செடியை அதிகமாக வீட்டில் வளர்க்கிறார்கள். பாம்புகளுக்கும் இந்த மல்லிகை செடியின் வாசனை மிகவும் பிடிக்கும். அதனால் மல்லிகை மற்றும் முல்லை போன்ற வாசனை பரப்பும் செடிகளை நோக்கி பாம்புகள் வருகின்றன.
  • க்ளோவர் செடி, இது பார்ப்பதற்கு நான்கு இதழ்கள் கொண்ட பூ போல இருக்கும். இது தரையோடு தரையாக இருக்கும். அதிகமாக வளராது. இது பாம்புகளுக்கு வந்து படுத்து கொள்ள சௌகரியமான ஒன்றாக அமைகிறது. பொதுவாக பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேர்ந்தெடுக்கின்றன. அந்த வகையில் இந்த க்ளோவர் செடியின் வேர்ப்பகுதி மிகவும் குளிர்நத மற்றும்  ஈரப்பதத்தை தக்க வைத்துகொள்ளும் தன்மை கொண்டவை. அதனால் பாம்புகளுக்கு இந்த செடியை மிகவும் விரும்புகின்றன.
  • எனவே பாம்புகள் அதிகம் விரும்பும் இந்த செடிகளை வீட்டில் வளர்க்கும் போது அதிக கவனம் தேவை. அவ்வப்போது செடிகள் மற்றும் செடிகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அடைசல் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். பாம்புகளுக்கு பிடித்த இந்த செடிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது இன்னும் சிறந்தது.

 

பாம்புகள் பழிக்கு பழி வாங்கும் என்பது உண்மையா..? பொய்யா..?

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement