வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாம்புகள் பழிக்கு பழி வாங்கும் என்பது உண்மையா..? பொய்யா..?

Updated On: April 2, 2024 4:26 PM
Follow Us:
Will Snakes Revenge in Tamil
---Advertisement---
Advertisement

Will Snakes Revenge in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே பாம்புகளை நேரில் பார்த்திருப்போம். அதிலும் இவ்வுலகளவில் 2,968 வகையான பாம்புகளும், நம் இந்தியாவில் மட்டும் 276 வகையான பாம்புகள் இருப்பதாக ஆராய்ச்சியில் கூறுகின்றன. அதிலும் பல பாம்புகள் அதிக விஷம் கொண்டவையாக இருக்கின்றன.

பெரும்பாலும் நம் பகுதிகளில் நல்ல பாம்பு தான் அதிகமாக காணப்படும். மேலும் நம் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் பாம்பை கொள்ளவே அவ்வளவு பயப்படுவார்கள். காரணம் பாம்புகள் பழிவாங்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையாகவே பாம்புகள் பழிவாங்குமா என்று நம் அனைவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக பாம்புகள் பழிவாங்கும் என்று சொல்வது உண்மையா..? பொய்யா என்று இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பாம்பு பற்றிய சுவாரசியமான உண்மைகள்..

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா..? 

will Snakes Revenge

பொதுவாக பாம்புகள் என்றால் கண்டிப்பாக நம் அனைவருக்குமே பயமாக இருக்கும். காரணம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனாலேயே பாம்புகள் நம் வீட்டிற்குள் வந்தால் நாம் அதை கொன்று விடுகிறோம்.

அதை கொன்ற பிறகு நம் அனைவருக்குமே மனதில் ஒரு பயம் வந்துவிடும். என்னவென்றால் நாம் அடித்து கொன்ற பாம்புகள் திரும்பி வந்து நம்மை பழிவாங்குமா என்று அதிகமாகி பயப்படுவோம்.

அதுபோல நாம் ஒரு பாம்பை கொன்றால் அந்த பாம்பு கொன்ற இடத்திற்கு இன்னும் சில பாம்புகள் வந்துவிடும். உடனே நாம் இந்த பாம்புகள் நம்மை பழிவாங்கும் என்று பயம் கொள்வோம்.

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா

அவ்வளவு ஏன் இந்த நவீன உலகிலும் பாம்பை கொன்றால் மற்ற பாம்புகள் வந்து நம்மை பழிவாங்கும் என்று இன்னும் சில கிராமங்களில் நம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதிலும் நாம் அடித்து கொள்ளும் போது அந்த பாம்பிற்கு நெருக்கமான பாம்பின் மனதில் நாம் கொன்றது அப்படியே பதிந்துவிடும் என்றும், அப்படி நெருக்கமான பாம்பை கொன்றவர் எங்கிருந்தாலும் அவர்களை பழிவாங்குவதற்காக அவரை பின் தொடரும் என்று இன்னும் சில இடங்களில் நம்பப்பட்டு வருகிறது.

இதற்காகவே பாம்புகள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் கூறிய உண்மை தகவலை நாம் இப்போது பார்க்கலாம்.

இப்போது நாம் ஒரு பாம்பை கொள்ளும் போது, அந்த இடத்திற்கு இன்னொரு பாம்பு வந்தால் அந்த பாம்பானது நம்மை பழிவாங்க வருகிறது என்று அர்த்தம் இல்லை.

பொதுவாக நாம் ஒரு பாம்பை அடித்து கொள்ளும் போது, பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பியானது பல முறை வெடிக்கிறது. அப்படி அந்த சுரப்பி வெடிக்கும் போது, அதிலிருந்து ஒரு சிறப்பு வாசனை வெளியேறுகிறது.

உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா

இந்த வாசனையானது மற்ற பாம்புகளை ஈர்க்கிறது. அதிலும் இந்த வாசனையானது பெண் பாம்புகளை தான் அதிகம் ஈர்க்கிறது.

அதனால் தான் நாம் பாம்புகளை கொன்ற இடத்திற்கு மற்ற பாம்புகள் வருகின்றன. இதை அறியாத கிராம மக்கள், பாம்புகளை அடித்து கொன்றதால் தான் மற்ற பாம்புகள் நம்மை பழிவாங்க வருவதாக கூறுகின்றன.

எனவே பாம்புகளுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பாம்பு போன்ற ஊரும் உயிரினங்களுக்கு, மூளை மிகவும் சிறியதாக இருக்கும். அப்படி இருக்கையில் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்கும் திறன் பாம்புகளுக்கு கிடையாது. எனவே பாம்புகளுக்கு பழி வாங்கும் தன்மை கிடையாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now