Snake Information in Tamil
பொதுவாக சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகளை கண்டு அஞ்சாதவர்கள் கூட அளவில் சிறிய பாம்பினை கண்டு அஞ்சுவார்கள். அதனால் தான் பாம்பினை கண்டால் படையும் அஞ்சும் என்று கூறுவார்கள். நாம் அனைவரையும் பயமுறுத்தும் பாம்பினை பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை.
இன்றைய பதிவில் பாம்பினை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பாம்பு பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=>உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா
Snake Facts and Information in Tamil:
பாம்பு என்பது ஊர்வன வகையை சேர்ந்த ஒரு உயிரினம் ஆகும். இது முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்டது.
பாம்புகளில் தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் நச்சுப் பாம்புகள் ஆகும்.
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை.
இந்தியாவிலுள்ள ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சு பாம்புகள் அதிக நஞ்சு கொண்ட பாம்பு ஆகும்.
இதற்கு கால்கள் இல்லை எனினும் தன் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரும் திறனை கொண்டுள்ளது.
அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து தென்துருவம் மற்றும் வடதுருவம் போன்ற இடங்களில் பாம்புகளே கிடையாது.
பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன.
இதையும் படித்துப்பாருங்கள்=> கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்
பொதுவாக ஒரு பாம்பின் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டுவிட்டாலும் அதன் துண்டிக்கப்பட்ட தலை சில மணிநேரம் விஷத்தன்மையுடன் இருக்கும். அச்சமயங்களில் அதனிடம் கடிப்பட்டால் விஷத்தின் வீரியம் அதிக அளவில் இருக்கும்.
சுற்று சூழலில் உள்ள வெப்பநிலை பாம்பின் செரிமான அமைப்பிற்கு மிகுந்த பங்கு வகிக்கின்றது. அதிக உடல் வெப்ப நிலையை கொண்டுள்ள பாம்பினால் தனது உணவை எளிதில் ஜீரணித்து கொள்ள முடியும். பொதுவாக அதிக அளவில் உணவினை உட்கொண்ட பாம்பு தனது உணவினை ஜீரணித்து கொள்ள 3 -5 நாட்கள் ஆகும்.
பொதுவாக பாம்புகளுக்கு வெளிப்புற காதுகள் ஏதும் இல்லை என்றாலும் அவை ஒலி அதிர்வுகளை தோல், தசை மற்றும் எழும்புகளின் மூலம் உட்புறத்தில் உள்ள காதுகளுக்கு கடத்துகின்றது.
இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க இதை செய்துடுங்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |