Why Snake And Mongoose fight In Tamil
நாம் எல்லோருமே கீரியும் பாம்பும் சண்டை போடுவதை பார்த்திருப்போம். மனிதர்களுக்கு இடையே ஏற்படும் சண்டையை காட்டிலும் இந்த கீரிக்கும் பாம்புக்கும் வரும் சண்டையை நாம் விரும்பி பார்ப்போம். சமூக வலைத்தளங்களில் கூட கீரி பாம்பு சண்டை வீடியோ ரொம்ப ட்ரெண்டிங்கில் போகும். கிராம புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் இடையே உண்டாகும் சண்டைகளை நேரிலே பார்க்க முடியும். ஆனால் ஏன் பாம்பை கண்டால் கீரிக்கு ஆக மாட்டிங்கிது. கீரியை கண்டால் பாம்புக்கு ஆக மாட்டிங்கிது ஏன் என்று தெரியுமா ? கீரிக்கும் பாம்புக்கும் உண்டான சண்டையில் வெற்றி பெறுவது கீரி தான். இந்த பதிவில் கீரிக்கும் பாம்புக்கும் இடையில் ஏன் சண்டை வருகிறது என தெரிந்து கொள்வோம்.
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வர காரணம்
- பொதுவாகவே கீரி மற்றும் பாம்புக்கும் இடையில் ஒரு பகையுணர்வு இயற்கையாகவே காணப்படுகிறது. பாம்பை கண்டால் கீரிக்கும், கீரியை கண்டால் பாம்பிற்க்கும் பிடிக்காது. இது கீரி மற்றும் பாம்பிற்க்கும் காணப்படும் இயற்கை உள்ளுணர்வு.
- தாய் கீரிகள் இல்லாத சமயத்தில் பாம்புகள் கீரி குட்டிகளை கொன்று இரையாக்குகின்றன. இதனாலும் கீரிகளுக்கு பாம்புகளை கண்டால் சண்டையிட காரணமாக உள்ளது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அதிகபட்சமாக கீரிகளுக்கும் பாம்பிற்கும் உண்டான சண்டையில் கீரிகளே வெற்றி பெறுகின்றன. சில சமயங்களில் பாம்புக்கும் கீரிக்கும் உண்டான சண்டையில் கீரிகளும் இறந்து போகின்றன. காரணம் சண்டையின்போது பாம்பின் பற்கள் கீரியின் வயிற்றிலோ அல்லது வேறு இடத்தில் பட்டு அதிக இரத்தம் கசிந்து கீரி இறந்துவிடுகின்றன.
- பெரும்பாலும் கீரிக்கும் பாம்பிற்கும் ஏற்படும் சண்டையில் 75 இருந்து 80 % வரை கீரிகள்தான் வெற்றி பெறுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீரிகள் பாம்புகளை விடவும் மிகவும் சுறுசுறுப்பானவை. கீரிகள் உலகத்திலே கொடிய விஷத்தை கொண்ட ராஜநாகத்தையே கொன்றுவிடுகின்றன.
- கீரியின் உடலில் காணப்படும் அசிடைல்கொலின் ரிஃப்ளெக்ஸ் பாம்பின் விஷத்தில் இருக்கும் நியூரோடாக்சினில் இருந்து விஷம் ஏறாமல் பாதுகாக்கிறது. கீரி பாம்பை சோர்வாக்கி பின் பாம்பு சோர்வானதும் அதன் தலையை கடித்து குதறுகிறது. இதனால் பாம்பு இறந்துவிடுகிறது.
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |