Mongoose Animal in Tamil
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலங்கை பிடிக்கும். சில பேர் வீட்டில் அவர்களுக்கு பிடித்த விலங்குகளை வளர்ப்பார்கள். விலங்குகளுக்கு உரிய உணவுகள் போன்றவற்றை பார்த்து பார்த்து வாங்கி வைப்பார்கள். ஆனால் அந்த விலங்குகளை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அதாவது அந்த விலங்கு வேறு பெயர்கள், அதனுடைய ஆயுட் காலம் போன்றவை அறிந்திருக்க மாட்டார்கள். நம் பதிவில் தினந்தோறும் விலங்குகளை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கீரிப்பிள்ளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Mongoose Animal in Tamil:
mongoose என்பது ஆங்கிலத்தில் அழைக்க கூடிய பெயராக உள்ளது, இதனை தமிழில் கீரிப்பிள்ளை என்று அழைப்பார்கள். கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த கீரிப்பிள்ளையானது 34 வகைகளைகொண்டுள்ளது. இதனுடைய நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் தவிர்த்து) இருக்கிறது, 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில இனங்களைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில இனங்கள் குழுவாக வாழந்து இரையைப் பகிர்ந்துண்டு வாழ்கின்றன.
வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா
ஒரு குழுவில் 20 கீரைகள் இருந்தாலும் இதனை தலைமை தாங்குவது ஆன் கீறி பிள்ளையாக தான் இருக்கும்.
பெண் கீரிப்பிள்ளையின் கர்ப்ப காலம் 60 நாட்கள் முதல் 70 நாட்களாக இருக்கும். புதிதாக பிறந்த கீறி பிள்ளைகள் கரையான் புற்றிலியே 4 வாரங்களுக்கு வசிக்கும். ஒரு பிரசவத்தில் 1முதல் 6 குட்டிகள் வரை பெற்றெடுக்க கூடியது.
கீரிகளுக்கு ஆபத்து:
கீரிகளுக்கு எந்த வகையிலிருந்து ஆபத்து வரும் என்று வரும் என்று சொல்ல முடியாது. கழுகுகள், காட்டு நாய்கள், சிறுத்தை, நிலத்தில் வாழும் ஹார்ன்பில் போன்றவை ஆபத்தை ஏற்படுத்த கூடியது.
உணவுகள்:
கீரிப்பிள்ளைகள் உணவாக புழுக்கள், பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறிணிகள் போன்றவற்றை சாப்பிடும். ஆனால் இவற்றுக்கு பாம்பு கிடைத்தால் மகிழ்ச்சியாகிவிடும். பாம்பு எப்படி தான் படம் எடுத்தாலும் கீரிப்பிள்ளைகள் பாம்பை விடுவதில்லை.
இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொல்லும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது.
குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |