குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

Advertisement

Horse Interesting Facts in Tamil

பொதுவாக ஒரு மனிதனின் வேகம் மற்றும் துடிப்பிற்கு உதாரணமாக கூறப்படும் விலங்கு தான் குதிரைகள். அப்படி வேகம் மற்றும் துடிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் குதிரை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இன்றைய பதிவில் குதிரை பற்றிய பல வியக்க வைக்கும் மற்றும் மிகவும் சுவாரசியமான தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து குதிரை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்

10 Interesting Facts About Horses in Tamil:

10 Interesting Facts About Horses in Tamil

குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி ஆகும்.

இதன் அறிவியல் பெயர் Equus caballus ஆகும்.

இவை உலகில் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன.

குதிரையின் பிறப்பிடம் வட அமெரிக்கா ஆகும். அதன் பின்னர் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியது.

இவை கி.மு. 4000 ஆண்டுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விலங்கு.

குதிரையில் இன்றைய நிலையில் சுமார் 400 இனங்கள் உள்ளன.

குதிரைகள் பொதுவாக 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது.

குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். அதாவது தோராயமாக 11 மாதங்கள் தங்களின் குட்டிகளை கருவில் சுமக்கின்றன.

குதிரையின் குட்டிகள் பிறந்த உடனடியாக எழுந்து ஓடும் அளவிற்கு சக்தியை கொண்டுள்ளன.

பொதுவாக குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் திறன் கொண்டவை.

இதையும் படியுங்கள்=> நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil

 

Advertisement