தூக்கணாங்குருவி பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

Advertisement

Weaver Bird In Tamil

எல்லோருக்கும் பறவைகள் என்றாலே மிகவும் பிடிக்கும். பறவைகளின் சத்தம் மனதை அமைதியாக்கும். இப்போ இருக்கும் குழந்தைகளுக்கு நிறைய பறவைகள் பெயர்கள் தெரியவில்லை காரணம் பறவைகளில் ஒவ்வொரு இனமாக அழிந்து வருகின்றன. அதிகரிக்கும் செல்போன் டவர்களின் கதிர்வீச்சின் தாக்கத்தால் பறவைகள் அழிந்து கொண்டு இருக்கின்றன. பறவைகளின் இனம் அழியாமல் பாதுகாப்பது மனிதரான நம் கையில் தான் இருக்கிறது. சரி இன்று அனைவருக்கும் பிடித்த தூக்கணாங்குருவி பற்றி தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

தூக்கணாங்குருவியின் உடல் அமைப்பு :

weaver birgd pthoto

தூக்கணாங்குருவி பார்ப்பதற்கு சிட்டு குருவி போலவே சிறிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. ஆண் தூக்கணாங்குருவிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண் தூக்கணாங்குருவிகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். தூக்கணாங்குருவியின் உடல் நீளம் 15 செமீ வரை வளரக்கூடியது. இந்த குருவி வெறும் 20 கிராம் வரை தான் எடை கொண்டிருக்கும்.

தூக்கணாங்குருவியின் உணவுகள் :

இவ்வகை குருவிகள்  தானிய வகைகள் மற்றும் பூச்சி வகைகளை  உட்கொள்கின்றன. அரிசி, புல், தினை , சோளம், கம்பு ,புழுக்கள், பட்டாம்பூச்சி, சிலந்தி, நத்தைகள், தவளைகள், கரையான், வெட்டுக்கிளி, வண்டுகள்,போன்ற வயல் சார்ந்த உயிரனங்கள் மற்றும் தாவர தானியங்களை உண்டு இவைகள் உயிர் வாழுகின்றன.

தூக்கணாங்குருவி வாழும் இடங்கள் :

பொதுவாக தூக்கணாங்குருவி வயல் சார்ந்த இடங்களில் அதிகம் வசிக்கின்றன. இவை உயர்ந்த மரங்களில் கூடுகளை கட்டுகின்றன. பனைமரம், ஈச்சமரம் ஆகிய மரங்களில் கூடுகளை கட்டுகின்றன. கோடை காலங்களில் தண்ணீர் நிறைந்த கிணறு, குளம் ஆகிய  இடங்களில் வசிக்க விரும்புகின்றன. தூக்கணாங்குருவிகள் கூட்டாக வாழ கூடியவை.

தூக்கணாங்குருவி கூடு கட்டும் விதம் :

weaver birgd picture in tamil

இவை வயல்களில் இருக்கும் பனைமரம், ஈச்சமரம், போன்ற உயர்ந்த மரங்களில் வழக்கமாக கூடு கட்டி வருகின்றன . இலந்தை மரம், கருவேல மரங்களிலும் கூடுகளை கட்டுகின்றன. இது வயல்கள் மற்றும் காடுகளில் காணப்படும் நாணல் போன்ற நார்களை வைத்து இவைகள் கூடுகளை கட்டுகின்றன. உயர்ந்த இடத்தில கூடு கட்டுவதன் நோக்கம் பாம்புகள்,மற்றும் காகங்களின் தன் குஞ்சுகளை நெருங்காமல் இருக்கவும் இவைகள் இப்படி கூடுகளின் இடத்தை தேர்வு செய்கின்றன. ஆண் தூக்கணாங்குருவிகள் தான் கூடை முழுமையாக கட்டி முடிக்கும். உயர்ந்த இடத்தை கூடு கட்ட பிடிப்பதில் மற்ற ஆண் தூக்கணாங்குருவிகளிடையே போட்டிகள் உண்டாகும். இதில் அதிகம் அனுபவம் கொண்ட தூக்கணாங்குருவியே ஜெயிக்கின்றன. குருவிகளிலே மிகவும் சிறப்புமிக்க குருவிகளாக இந்த  தூக்கணாங்குருவிகள் காணப்படுகின்றன. காரணம் இதன் புத்திசாலித்தனமான கூடு காட்டும் விதம் தான். பொதுவாக மழை காலங்களுக்கு முன்னதாகவே கூடு கட்ட ஆரம்பிக்கின்றன தூக்கணாங்குருவிகள். காற்று வீசும் எதிர் திசையை நோக்கி கூடு கட்டுகின்றன. காற்று வீசும்போது முட்டைகள் மற்றும் கூட்டிற்கு சேதம் ஏற்படாமல் தடுக்க. கூட்டிற்குள் களிமண்ணை ஒட்டிவைத்து கொள்ளும் முட்டைகள் அதில் வைக்கப்படும்போது உறுதியுடன் இருப்பதற்காக இப்படி செய்கின்றன. களிமண்ணில் மின்மினி பூச்சியையும் ஒட்டி வைக்கின்றன. அதில் இருந்து வரும் வெளிச்சத்தினால் பயந்து இரவு எந்த உயிரினமும் நெருங்காமல்  இருக்கவும் இப்படி செய்கின்றன.

தூக்கணாங்குருவியின் இயல்புகள் :

கூடு கட்டும் பொறுப்புதான் ஆண் தூக்கணாங்குருவியுடையது குஞ்சுகளை காத்து பொரித்து அது பாதுகாத்து பராமரிப்பது எல்லாம் பெண் தூக்கணாங்குருவியின் பொறுப்பாகும். இத்தகைய குணம் கொண்ட ஆண், பெண் தூக்கணாங்குருவிகள் வேறு வேறு துணையுடன் வாழ கூடியவை. இவைகள் குஞ்சு பொறிக்கும் காலத்தில் அடர்ந்த மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

 

சிட்டுக்குருவி பற்றிய 5 வரிகள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement