வெயில் காலத்தில் கோழியை பராமரிப்பது எப்படி ?

Advertisement

Veyil Kalathil kozhi Paramarippu In Tamil

கோடை காலம் ஆரம்பமாகும் முன்பே வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெயில் காலங்களில் நம் உடலை கவனிப்பதில் நாம் அதிகம் ஆர்வம் காமித்து வருகின்றோம். அப்படி இருக்கையில் நாம் வளர்க்கும் உயிரினங்களையும் இந்த கோடை காலத்தில் நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிலும் கோழி வளர்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு. ஏனெனில் கோழிகள் வெயில் காலத்தில் நிறைய பாதிப்பு அடைகின்றன. கோழிகளை வெயில் காலத்தில் எப்படி பராமரிப்பது மற்றும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து கோழிகளை எப்படி  பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

வெயில் காலத்தில் கோழி பராமரிப்பு :

kozhi valarpu in tamil

  • கோடை காலத்தில் கோழிகளை காலை மற்றும் மாலையில் வெயில் தாழ்ந்த போது அனுப்ப வேண்டும். மதிய நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். உச்சி வெயில் கோழிகளுக்கு நோய்களை உண்டாக்கும்.
  • கோடை காலத்தில் கோழிகளுக்கு தண்ணீர் வைப்பதில் அதிக கவனம் தேவை. கோழிகளுக்கு எந்நேரமும் தண்ணீர் வைக்க வேண்டும். ஏனெனில் கோடை காலத்தில் கோழிகளுக்கு வெயிலின் தாக்கத்தால் அதிகமாக தாகம் எடுக்கும். கோழி மேயும் இடங்களில்  பாத்திரத்தில் நீரை நீங்கள் நிரப்பி வைத்துவிட்டால் அது தேவையின் போது தண்ணீர் குடித்துக்கொள்ளும்.
  • வெயில் காலங்களில் கோழிகள் நிழலான இடங்களில் இருக்க தான் அதிகம் இருக்க விரும்புகின்றன. உங்கள் வீட்டின் பின்புறத்தில் நீங்கள் நிறைய மரங்கள், செடிகள் வளர்க்கலாம். இப்படி செய்வதனால் கோழிகளுக்கு நிழலோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
  • உங்கள் வீட்டின் பின் புறத்தில் மரங்கள் வளர்க்க முடியாவிடில் சிறிய கொட்டாய்கள் போட்டுக்கொள்ளுங்கள். கோழிகள் நிழலோட்டமாக இருக்க இது உதவும்.
  • வெயில் காலத்தில் கோழி கொட்டாய்கள் மேல் கூரையில் தண்ணீர் தெளித்து விடுங்கள். இப்படி செய்வதால் கொட்டாய்கள் கோழிகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
  • வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி கூட கோழிகளுக்கு போடலாம். இது கோழிகளுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றன. காய்கறி வெட்டிய பின் மீந்து போகும் காய்கறி கழிவுகளையும் கோழிகளுக்கு கொடுக்கலாம். இது கோழிகளுக்கு நிறைய ஊட்ட சத்துக்களை தருகின்றன. மேலும் கோழிகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.
  • கோழிகள் அதிகம் அடையும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அப்பதான் வெயில் காலத்தில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களின் தொற்றுகளில் இருந்து கோழிகளை பாதுகாக்க முடியும்.
  • கோழிகள் அருந்தும் தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் தூள் கலந்து கொடுங்க. இது வெயில் காலத்தில் கோழிகளுக்கு ஏற்படும் அம்மை நோயிலிருந்து தடுக்க முடியும்.
  • கோழிகளுக்கு எலுமிச்சை சாறு அல்லது மோர் போன்ற தண்ணீர் சத்து உள்ள பானங்களையும் கொடுக்கலாம். இது கோழிகளை குளிர்ச்சிப்படுத்தி தண்ணீரை உடலில் தக்க வைத்து கொள்ளும்.

 

நமக்கேற்ற நாட்டு கோழி வளர்ப்பு..! அதிக லாபம் தரும் சிறு தொழில்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement