பாம்புக்கு காது கேட்காது என்றால், அது எப்படி மகுடி சத்தத்திற்கு நடனமாடுகிறது..?

Advertisement

Snake Have Ears Or Not in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது நாம் அனைவருமே பாம்புகளை நேரிலும் படத்திலும் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் பலரும் பாம்புகளை வீட்டிலேயே வளர்த்து வருகிறார்கள். அதுபோல நம் நாட்டில் பலவகையான பாம்புகள் இருக்கின்றன. அதிலும் இவ்வுலகளவில் பார்க்கும் போது 2,968 வகையான பாம்புகளும், நம் இந்தியாவில் மட்டும் 276 வகையான பாம்புகள் இருப்பதாக ஆராய்ச்சியில் கூறுகின்றன.

அதிலும் பல பாம்புகள் அதிக விஷம் கொண்டவையாக இருக்கின்றன. சரி பொதுவாக நம்மில் பலருக்கும் பாம்புகளை பார்த்தால் இல்லை, பாம்பு என்று சொன்னாலே அவ்வளவு பயமாக இருக்கும். அதுபல நம் வீட்டுக்கு பாம்பு வந்தாலும், அதை பலரும் அடிப்பதில்லை. காரணம் பாம்புகள் பழிவாங்கும் என்று இன்னும் நம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனா உண்மையில் பாம்புகள் பழி வாங்குமா..? பழி வாங்காதா என்பதை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

பாம்புகள் பழிக்கு பழி வாங்கும் என்பது உண்மையா.. பொய்யா..

பாம்புக்கு காது கேட்குமா..? 

பாம்புக்கு காது கேட்குமா

பொதுவாக பாம்புகள் என்றால் நம் அனைவருக்குமே பயமாகத் தான் இருக்கும். அதை தான் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொன்னார்கள். அதுபோல நாம் அனைவருமே பாம்புகளுக்கு காது இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பாம்புகளுக்கு காதுகள் கிடையாதாம்.

ஆமா பிரண்ட்ஸ்..! பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. பாம்புகள் சுவை உணர்ச்சி, வாசனையை நுகர்தல் மற்றும் வெப்பம் ஆகிய உணர்வுகளால் மட்டுமே பாம்பு அதன் வாழ்நாளை கழிக்கிறது.

இருந்தாலும் பாம்புகள் ஒலியை மட்டுமே உணர்ந்து வாழ்கின்றன. அதாவது பாம்புகளால் ஒலியை மட்டுமே உணரமுடியும் என்று 1970 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அது எப்படி என்று நம் அனைவருக்குமே ஒரு கேள்வி இருக்கும். அதை பற்றி தற்போது பார்ப்போம்.

பொதுவாக தறியில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்புகளின் கீழ் தாடையில் அமைத்துள்ள உருளையான ஓர் அமைப்பில், அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

பாம்பு பற்றிய சுவாரசியமான உண்மைகள்..

பாம்புக்கு காது கேட்குமா

இதனால் தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அந்த அதிர்வுகள் மூலம் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டத்தை எளிதில் அறிந்து கொள்கின்றன.

இது எப்படி என்றால், பாம்புகளுக்கு செவிப்பறை கிடையாது. ஆனால், செவிச்சுருள் பகுதி உள்ளது. இப்பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டவுடன் அது நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதுபோல ஒலியின் மூலம் தான் பாம்புகள் சத்தத்தை உணருகின்றன.

மகுடி சத்தத்தை கேட்டு தான் பாம்புகள் ஆடுகிறதா..? 

சரி பாம்புகளுக்கு காதுகள் கிடையாது என்று சொல்கிறீர்கள். ஆனால் பாம்புகள் மகுடி சத்தம் கேட்டு ஆடுகிறதே அது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக பாம்புகள் மகுடி சத்தத்தை கேட்டு ஆடுவதில்லை. மகுடி ஊதுபவர்கள், மகுடியை அங்கும் இங்குமாய் ஆட்டுவதாலும், அவர்களும் அசைவதாலும் தான் பாம்புகள் அதற்கேற்ப தங்கள் உடலை அசைக்கின்றன.

உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement