Monthly 1000 For Ration Card in Tamilnadu
நண்பர்களே நீங்கள் அதிகம் எதிர்பார்த்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. அது என்ன திட்டம் என்று பின்பு தெரிந்துகொள்ளலாம். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் மூலம் நிறைய மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
அதேபோல் தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை வழங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் நிறைய பெண்கள் பயன்பெறுவார்கள். இதனை தொடர்ந்து யாருக்கு 1000 ரூபாய் பணம் கிடைக்கும் என்றும், யாருக்கு கிடையாது என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இப்போது யாருக்கு கிடைக்கும் என்றும், அது எப்போது அமுலுக்கு வரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அது என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Monthly 1000 For Ration Card in Tamilnadu:
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு கூட்டத்தொடரில் பெரிதும் எதிர்பார்த்த திட்டம் தான் மாதம் 1000 ரூபாய் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களில் தகுதியான 1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்த குடும்ப தலைவியின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தபடும். இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15 –ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று முதல் இத்திட்டம் செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேபோல் இதில் தகுதியானவர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டார். ஆகவே நடைபாதையில் கடை வைத்துள்ள பெண் வியாபாரிகள், கட்டிட வேலை பார்க்கும் பெண்கள், மீனவ, சிறு, குறு தொழிலில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், விதவை, ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகை பெறாதவர்கள் என இவர்கள் அனைவரும் இந்த 1000 ரூபாய் பெற தகுதியானவர்கள் என அறிவித்தார்.
அதேபோல் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் 1 கோடி மகளிருக்கு மாதம் Rs.1,000, இயற்கை வேளாண், கல்வி உள்ளிட்ட பல்வேறு மகத்தான நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என மு.க ஸ்டாலின் கூறுகிறார்.
ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்கவில்லையா அப்போ இந்த செய்தியை தெரிஞ்சுக்கோங்க
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |