ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு
ஆதார் மற்றும் பான் கார்டு என்பது இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த இரண்டு ஆவணங்கள் மட்டும் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அட்டை இத்தகைய ஆவணங்களும் முக்கியமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து மத்திய அரசானது ஆதார், பான் கார்டு இணைப்பினை கட்டாயமாக்கி வந்தது. ஏனென்றால் ஒரு நபரின் அனைத்து விதமான நிதிபரிவர்த்தனையும் பான் கார்டு மூலம் தான் கணக்கிடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு நபரின் ஏதாவது ஒரு ஆவணத்தில் பிழை இருந்தால் அதனை ஆதார் கார்டில் மட்டும் சரி செய்தால் போதும் என்ற மற்றொரு அறிவிப்பினையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆதார் மற்றும் பான் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அதனை எப்படி சரிசெய்வது என்றும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஆதார் பான் இணைப்பு:
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பானது மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசானது ஒரு அறிவிப்பினை மக்களுக்கு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த கடைசி தேதிக்குள் யாரும் இத்தகைய இணைப்பினை முடிக்காத காரணத்தினால் மத்திய அரசானது ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைத்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அவ்வாறு இணைக்காவிட்டால் ஜூலை 1-ஆம் தேதி முதல் 1,000 ரூபாய் அபராதமும் மற்றும் பான் கார்டு செயலிழக்கப்படும் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. ஆனால் ஆதார் மற்றும் பான் கார்டினை ஜுன் மாதத்திற்குள் இணைக்கவில்லை என்றால் மேலும் சில சிக்கல்கள் ஏற்படும்… அத்தகைய சிக்கல்கள் என்னவென்றால்
ஆதார் பான் கார்டினை இணைக்காமல் விட்டு விட்டால் நீங்கள் செலுத்தும் வருமான வரி ஆனது தாக்கல் செய்யப்பட முடியாது.
இவ்வாறு நீங்கள் வருமான வரி செலுத்தாமல் விட்டு விட்டால் மேலும் கூடுதல் அபரதத்துடன் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய பான் கார்டு செயலிழக்கப்படுவதனால் வேறு ஏதேனும் வங்கியில் Account ஓபன் செய்யவோ, கிரெடிட் கார்டு பெறவோ, வங்கி அல்லது நிதிநிறுவனத்தில் கடன் பெறவோ முடியாது.மேலும் நிதிபரிவர்த்தனைகளில் KYC ஆவணங்களில் பான் கார்டு தான் முக்கிய பங்கு வகித்து இருப்பதால் இதிலும் நீங்கள் பான் மற்றும் ஆதார் கார்டினை இணைக்கவில்லை என்றால் பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
எனவே பான் மற்றும் ஆதார் கார்டினை ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கண்ட சிக்கல்கள் ஏற்படும்.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் மற்றும் பான் கார்டு வச்சுருக்கவங்களுக்கு மத்திய அரசு இப்படியெல்லாம் அறிவிச்சா என்னப்பா பண்றது..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |