முதலமைச்சரின் “நீங்கள் நலமா திட்டம்”

Advertisement

Neengal Nalama Scheme in Tamil

வணக்கம் நண்பர்களே. முதலமைச்சரின் நீங்கள் நலமா திட்டம் பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுமக்களுக்கு பல்வேறு விதமான பயனுள்ள திட்டங்களை அறிவித்து வரும் வகையில், முதலமைச்சர் அவர்கள் “நீங்கள் நலமா திட்டம்” என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டம் எதற்காக தொடங்கப்பட்டது.? இத்திட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும்.? இத்திட்டத்தின் நோக்கம் என்ன.? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவின் மூலம் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

“நீங்கள் நலமா திட்டம்” பற்றி நாம் அனைவருமே கேட்டு இருப்போம். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைப்பதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மார்ச் 06 ஆம் தேதி சென்னையில் நீங்கள் நலமா திட்டத்தினை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்.

நான் முதல்வன் திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள்!

நீங்கள் நலமா திட்டம்:

அரசு மக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக “நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அனைத்து துறைச் செயலாளர்களும் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். அதுமட்டுமில்லாமல், முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

நீங்கள் நலமா திட்டம்

ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் கருதி மக்களுக்கான திட்டங்களை பார்த்து செய்து வருகிறேன். மக்களுக்கு தொண்டு செய்வது ஒன்று தான் நம் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், முன்னதாக தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், தற்போது மக்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ள “நீங்கள் நலமா திட்டம்” நல்ல முறையில் செயல்பட்டு வரும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

சிறு தொழில் தொடங்க 5 கோடி வரை லோன் தரும் அருமையான திட்டம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement