New District Announcement in Tamil Nadu
குடியரசு தினம் அன்று மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்க பட்ட செய்தி தமிழகத்தில் புதிய மாவட்ட அறிவிப்பு பற்றிய தகவலை பற்றி தான், ஏனென்றால் சமீப காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த new district in tamilnadu தொடர்பாக ஏதும் செய்தியை முதல்வர் ஸ்டாலின் குடியரசு தினம் அன்று வெளியிடுவார் என்று மக்கள் பெரிதும் என்னிருந்தார்கள். ஆனால் இதை பற்றி ஏதும் அவர் பேசவில்லை. ஏற்கனவே சில பெரிய மாவட்டங்களை பிரித்து மொத்தம் 38 மாவட்டங்களாக மாற்றி இருந்தார்கள்.
இருப்பினும் இன்னும் நிறைய மாவட்டங்களை பிரிப்பதன் நோக்கம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால்தான், இந்த கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. நீங்கள் new district announcement in tamil nadu பற்றிய செய்திகளை முழுமையாக அறிய இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
தமிழ்நாட்டின் புதிய மாவட்டம்
அதிமுக ஆட்சியின் போது பெரியமாவட்டங்கலானா நெல்லை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் இவற்றிலிருந்து சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
எப்படி என்றால் நெல்லையிலிருந்து தென்காசி, விழுப்புரதிலிருந்து கள்ளக்குறிச்சி, வேலூரிலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு என ஐந்து மாவட்டங்களை பிரித்தனர். அதுமட்டுமின்றி நாகப்பட்டினத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்தனர்.
New District in Tamilnadu
இப்படி மாவட்டங்களை பிரித்ததை தொடர்ந்து இன்னும் இருக்கும் சில பெரிய மாவட்டங்களை பிரிப்பதற்காக கோரிக்கைகள் எழுந்துள்ளது, இவை நமது நாடு வளர்ச்சி ஆவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்ப படுகின்றது.
தனக்கென ஒரு மாவட்டம் அமைய வேண்டும் என மக்கள் அரசிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்திற்கு 7 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் புதிதாக சேர்க்கப்பட்டும் 7 மாவட்டங்களாக மக்கள் கருதுவது கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை திண்டுக்கல், கோவை மற்றும் திருப்பூரை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி இவற்றிலிருந்து பிரித்து கொடுக்கலாம் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கான முயற்சி விரைவில் எடுக்கப்படும் என்று நம்பப்படுகின்றது. ஆகமொத்தம் 45 மாவட்டங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |