இது நம்ம ஊரு ரேஷன் கடையா என்பது போல் ரேஷன் கடைகளில் மாற்றம்..! அனைத்து பொருட்களும் அங்கேயே கிடைக்கும்..!

Advertisement

Ration Shop News in Tamil

பொதுவாக மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவது என்றால் அது ரேஷன் கடை தான். இந்த ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்குள் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்தை அடைவார்கள்.  அந்த அளவிற்கு கடினமாக உள்ளது என்று மக்கள் அனைவரும் தெரிவித்து  வருகிறார்கள். அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் ரேஷன் கடைகளுக்கு சென்றால் ஒவ்வொரு கார்டுகளுக்கும் பொருட்களும் மாறுபடும். அதேபோல் அளவுகளும் மாறுபடுகிறது என்று புகார்கள் வந்து கொண்டுள்ளது. அதனை சரி செய்யும் விதமாக நிறைய மாற்றம் கொண்டு வருகிறது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ration Shop News in Tamil:

இந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக முன் மாதிரி ரேஷன் கடையை திறக்க உள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோக ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க.

பிற மாநில அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளார்கள். அதேபோல் சில மாநிலத்தில் அதனை பின் பற்றி வருகிறது. ரேஷன் அட்டை பொறுத்து ரேஷன் கடையில் பொருட்களின் அளவுகள் மாறுபடுகிறது. அதனால் தான் முன் மாதிரி ரேஷன் கடை திறக்க உள்ளார்கள். இதில் முதற்கட்டமாக,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரங்கநாதன் சாலையில் இந்த ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ரேஷன் கடையில் சாதாரண பொருட்கள் போல் இல்லாமல் சூப்பர் மார்க்கெட்டில் இருப்பது போல் பொருட்கள் இருக்கும். அங்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கூட்டுறவுத்துறையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

 அதேபோல் ரேஷன் கடைகளில் அரசி பருப்பு, கோதுமை போன்ற பொதுவான பொருட்கள் மட்டும் கிடைக்கும். ஆனால் இந்த முன் மாதிரி ரேஷன் கடையில் இனிப்பு வகைகள், சோப்பு, ஷாம்பு, பிஸ்கட் பொருட்கள், சாக்லேட்டுகள், ஜூஸ்கள், பேஸ்ட் வகைகள், பல்வேறு வகையான எண்ணெய் பொருட்கள் என்று அனைத்து விதமான சூப்பர் மார்க்கெட் பொருட்களும் இங்கே கிடைக்கும். அதேபோல் 255 பொருட்களும் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

சூப்பர் மார்க்கெட்டில் இருப்பது போல் கேமராக்கள் கூட இருக்குமாம். ரேஷன் கடையில் கேள்விகள், புகார்கள் கொடுக்க முடியாது. ஆனால் இங்கு அந்த வசதிகளும் கிடைக்கும். இது மற்ற மாவட்டத்திலும் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு.1 கோடி நபர்கள் தேர்வு..! யார் தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement