வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி.?

Updated On: July 4, 2023 9:29 AM
Follow Us:
thakkali illamal sambar seivathu eppadi
---Advertisement---
Advertisement

தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி.?

குழம்பு, சட்னி, வறுவல் போன்ற எந்த உணவு செய்வதாக இருந்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல் உணவு தயார் செய்ய முடியாது. தற்போது தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையில் எல்லாரும் மனதில் உள்ளது தக்காளி இல்லாமல் ஏதும் உண்வு செய்ய முடியுமா என்று தான் யோசித்து கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி இல்லாமல் சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:

  1. பருப்பு-1/4 கிலோ
  2. வெங்காயம்- 2
  3. கடுகு- 1 தேக்கரண்டி
  4. சீரகம்- 1/2 தேக்கரண்டி 
  5. பெருஞ்சீரகம்- 1/2 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை- சிறிதளவு
  7. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய்-5
  10. எண்ணெய்- 2 தேக்கரண்டி
  11. கத்திரிக்காய்-1
  12. அவரைக்காய்-
  13. முருங்கைக்காய்-1

தக்காளி இல்லாமல் சாம்பார் செய்முறை:

தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி

முதலில் 1/4 கிலோ துவரப்பருப்பை எடுத்து கழுவி விட்டு வேக வைக்கவும். வேகின்ற நேரத்தில் வெங்காயம், கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பருப்பு வெந்த பிறகு நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும், பெருஞ்சீரகம், சீரகம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தையும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் சிவந்த நிறம் வந்த பிறகு கடைந்து வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், நறுக்கி வைத்த காய்கறி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

காய்கறி வெந்த பிறகு புளி தண்ணீர் சிறிதளவு, சாம்பார் பவுடர் 1 தேக்கரண்டி, தேங்காய் பால் 1/4 கப் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

தக்காளி இல்லாமல் என்னென்ன உணவுகள் செய்யலாம்

தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி

தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி?

தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now