Samsung Galaxy F14 5G Review in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் Review பகுதியில் ஒவ்வொரு பொருட்களின் விவரங்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சாம்சங் நிறுவனத்தின் சூப்பரான ஸ்மார்ட் போன் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். சாம்சங் நிறுவனம் புது புது மாடல்களில் ஸ்மார்ட் போன்களை தயார் செய்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய Samsung Galaxy F14 5G ஸ்மார்ட் போன் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Samsung Galaxy F14 5g Specifications in Tamil:
வடிவமைப்பு:
சாம்சங் கேலக்சி F14 5g ஸ்மார்ட் போன் ஆனது,166.8 mm உயரத்திலும், 77.2mm அகலத்திலும் 9.4mm திக்னெஸ் உடனும் வடிவமைக்கப்பட்டு 205 கிராம் எடையுடன் வருகிறது. மேலும், Goat Green, Omg Black போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
டிஸ்பிளே:
இவற்றின் டிஸ்பிளே PLS LCD டிஸ்பிளே வகையை உடையது. டிஸ்பிளேவின் அளவானது 6.6 அங்குலத்துடன் அதாவது, 16.76 cm அளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 90 Hz அளவிற்கு டிஸ்பிளேவை புதுப்பித்து விவரங்களை தெளிவாக காண்பிக்கிறது.
கேமரா:
சாம்சங் கேலக்சி F14 5g ஸ்மார்ட் போன், டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. இவற்றின் பின்புற கேமரா 50MP அளவிலும் முன்புற கேமரா 13MP அளவிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்:
சாம்சங் கேலக்சி F14 5g ஸ்மார்ட் போனின் பேட்டரி ஆனது, 6000 mAh அளவில் வருகிறது. மேலும் 25W அளவிற்கு பாஸ்ட் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் வருகிறது. மேலும் இவற்றின் இன்டெர்னல் மெமரி 128GB அளவில் வருவதோடு 1TB வரை விரிவாகக்கூடியதாகும் வருகிறது. RAM ஆனது 4GB அளவிலும் அமைக்கப்பட்டு வருகிறது. சாம்சங் கேலக்சி F14 5g ஸ்மார்ட் போன் Samsung Exynos 1330 ப்ராசசர் மூலம் செயல்படுகிறது.
Samsung Galaxy F14 5g Launch Date and Price in Tamil:
சாம்சங் கேலக்சி F14 5g ஸ்மார்ட் போன், மார்ச் 30 ஆம் தேதி வெயிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை 14,490 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்மைகள்:
- இது பணத்திற்கேற்ற நல்ல தயாரிப்பு.
- இவற்றின் தோற்றம் நன்றாக உள்ளது.
- கேமரா மற்றும் டிஸ்பிளே நன்றாக உள்ளது.
- இவற்றின் தரம் நன்றாக உள்ளது.
பாதகம்:
ஸ்மார்ட் போனின் எடை சற்று அதிகமாக உள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |