கிட்சன் சிங்க்
நம்முடைய தாத்தா பாட்டிகள் காலத்தில் தான் பாத்திரத்தை கழுவதற்கு வீட்டின் பின்புறம் எடுத்து செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் கையை கழுவ வேண்டும் என்றாலே பின்புறம் தான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் உள்ளையே எல்லா வசதியும் இருக்கிறது. நம்முடைய வீடு எந்த அளவிற்கு மாடலாக கட்ட வேண்டுமோ அந்த அளவிற்கு மாடலாக கட்டலாம். வீட்டின் உள்ள பொருட்களும் மாடலாக வாங்கலாம். இந்த பதிவில் வீட்டில் உள்ள சிங்க் பற்றி பார்க்க போகிறோம். வாங்க இந்த சிங்கில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Most Trending Smart Kitchen Sink:
இந்த சிங்கை கிட்சனில் வைத்திருப்பதால் உங்களின் வேலைகளை சுலபமாக மாற்றுவதற்கு உதவுகிறது. இந்த சிங்க் மூலம் நீங்கள் காய்கறிகளை கட் செய்து கொள்ளலாம், கழுவி கொள்ளலாம். பாத்திரங்களை கழுவி கொள்ளலாம்.
காய்கறிகளை கழுவதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும், பாத்திரங்களை கழுவதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று அதற்கு தேவையான தண்ணீர் என்று தனித்தனியாக இருக்கிறது. இதன் மூலம் தண்ணீர் வேஸ்ட் ஆகாது.
இந்த சிங்க் ஆனது துருப்பிடிக்காத எஃகு மூலம்வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதாக சுத்தம் செய்வதற்கும், அதிக நீடித்திருக்கும் தன்மைக்கும் மேற்பரப்பில் நானோ பூச்சு உள்ளது.
இதிலேயே நீங்கள் குடிக்கும் நீரையும் பிடித்து கொள்ளலாம், பாத்திரம் விளக்குவதற்கான லீகுய்டுகளையும் இதிலேயே செட் செய்து வைத்து கொள்ளலாம். இந்த சிங்கிள் இவ்வளவு வேலைகள் இருக்கிறது இதனை சுத்தம் செய்வது கடினம் என்று நினைக்காதீர்கள். இதனை சுத்தம் செய்வது எளிமையான ஒன்று.
இதனை நீங்கள் வீட்டில் மூலம் ஒரே நேரத்தில் பல வேலைகளைசெய்வதற்கு உதவுகிறது
விலை:
இந்த சிங்கின் விலை 12,999 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. அதனால் இதனை வாங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
தீமைகள்:
இதனுடைய விலை அதிகமாக இருக்கும்.
உங்களுடைய வீடு சின்னதாக இருந்தால் இதனை வைப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்த சிங்கை வைப்பதற்கு நிறைய இடம் தேவைப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |