தேங்காய் துருவ ரொம்ப கஷ்டப்படுறீங்களா..! இது மட்டும் உங்க வீட்ல இருந்தா 2 நிமிடத்தில் தேங்காய் துருவிடலாம்..!

Advertisement

Wise Electric Coconut Scraper Review in Tamil

அனைவருக்கும் சமைக்கும் போது இருக்கும் பெரும் பிரச்சனை தேங்காய் துருவது. தேங்காய் துருவுவதற்கு சிரமமாக இருப்பதால் சில பேர் தேங்காயை உணவில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தேங்காயில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. இதை நாம் உண்ணும் உணவில் இருந்து ஒதுக்கினால் நம் உடலுக்கு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும். எனவே தேங்காவை ஈசியாக துருவலாம். அதுவும் 2 நிமிடத்தில் துருவுவதற்கு மிஷின் ஒன்று உள்ளது. அதுதான் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பர். இது உங்கள் வீட்டில் இருந்தால் போதும் ஈசியாக தேங்காய் துருவலாம். வாருங்கள் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பர் மிஷின் எவ்வாறு நமக்கு வேலை செய்வதற்கு பயன்படுகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

How to Work Wise Electric Coconut Scraper in Tamil:

வைஸ் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பார்  மின்சாரம் மூலம் செயல்படுகிறது. இதில் உள்ள இரண்டு வகையான ஸ்பீடு பட்டன்களை பயன்படுத்தி தேங்காய் துருவி கொள்ளலாம். மேலும் இதன் தேங்காய் துருவும் பிளேடானது துருப்பிடிக்காத எஃகு மூலம் உருவாக்கப்பட்டு கூர்மையான வடிவமைப்புடன் இருப்பதால் விரைவாக தேங்காயை துருவுகிறது.

தேங்காய் திருக கஷ்டமாக இருக்கா..! இனிமேல் இந்த மாதிரி செய்யுங்கள்..

 

வடிவமைப்பு:

வைஸ் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பார், 1கிலோ 500 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100W மோட்டார் பொருத்தப்பட்டு அழகிய பச்சை நிறத்தில் உள்ளது.

Wise Electric Coconut Scraper Prize:

வைஸ் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பார் 2,580 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்படுகிறது.

வைஸ் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பார் நன்மைகள்:

இந்த ஸ்க்ரப்பரை குறைந்த வேகத்தில் வைத்தாலும் வேகமாக தேங்காய் துருவுகிறது. இதில் உள்ள பிளேடுகள் சுத்தம் செய்வதற்கு எளிதானது. இதனை பயன்படுத்துவதன் மூலம் சமையலறையில் உள்ள வேலைகளை எளிதாக முடிகிறது.

வைஸ் எலக்ட்ரிக் கோக்கனட் ஸ்க்ரப்பார் தீமைகள்:

இந்த கோக்கனட் ஸ்க்ரப்பாரை பயன்படுத்தும் போது தேங்காவை இறுக்கமாக பிடித்து கொள்ள வேண்டும். சிறிது தேங்காய் நழுவினாலும் கைக்கு பாதிப்பு ஏற்படும்.

கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கையில் ஒரு துணியை வைத்து தேங்காய் துருவ வேண்டும்.

தேங்காய் பூவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? என்னப்பா சொல்றீங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement