அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை

Advertisement

Odi World Cup 2023 Schedule India

விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்க்க கூடிய விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் போதே ஆரவாரமாக பார்த்து கொண்டிருப்போம். சற்று நாட்களுக்கு முன்பு தான் IPL போட்டி நடைபெற்றது. அடுத்து நான்காவது முறையாக ICC ஒரு நாள் உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்த பதிவில் இந்தியா ODI உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ஒரு நாள் உலக கோப்பை அட்டவணை 2023

அணி தேதி இடம்
இந்தியா vs ஆஸ்திரேலியா 08.10.2023 சென்னை
இந்தியா vs ஆப்கானிஸ்தான் 11.10.2023 டெல்லி
இந்தியா vs பாகிஸ்தான் 15.10.2023 அகமதாபாத்
இந்தியா vs பங்களாதேஷ் 19.10.2023 புனே
இந்தியா vs நியூசிலாந்து 22.10.2023 தர்மசாலா
இந்தியா vs இங்கிலாந்து 29.10.2023 லக்னோ
இந்தியா vs குவாலிஃபையர் 2 02.11.2023 மும்பை
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 05.11.2023 கொல்கத்தா
இந்தியா vs குவாலிஃபையர் 1 11.11.2023 பெங்களூரு

 

கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்..!

 ஒருநாள் உலகக்கோப்பை விவரம்:

இந்தியா ஒருநாள் உலக கோப்பையை நடத்துவது நான்காவது முறையாகும். அதாவது 1897, 1996, 2011 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் நடத்துகிறது.

அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டம் தொடங்குகிறது.

அடுத்து அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு  எதிராக ஆட்டம் தொடங்குகிறது.

இந்தியா தனது கடைசி குரூப்-ஸ்டேஜ் ஆட்டத்தை நவம்பர் 11 ஆம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு எதிராக விளையாடுகிறது.

மேலும் பாகிஸ்தான் இந்த அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும். அதேபோல் இந்தியா அணி கடைசி 4 இடங்களுக்குள் வந்துவிட்டால் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியை விளையாடும்.

கூடைப்பந்தாட்டத்தின் அடிப்படை திறன்கள் பற்றி தெரியுமா..?

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement